Published : 01 Oct 2013 10:36 AM
Last Updated : 01 Oct 2013 10:36 AM

சர்ச்சையில் சிக்கும் ராம்கோபால்வர்மா!

'Attarintiki Daredi' படத்தின் வசூல் ஒட்டுமொத்த இந்திய திரையுலகின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

பவன் கல்யாண் - இயக்குனர் த்ரிவிக்ரம் இணைப்பில் வெளியான 'Attarintiki Daredi' படத்தின் வசூல் ஹைதராபாத்தில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.

அமெரிக்காவில் இப்படத்திற்கு கிடைத்திருக்கும் வசூல், இந்திய திரையுலகினரின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. பலரும் இப்படத்தின் வசூலைப் பார்த்து மலைத்துப் போயிருக்கிறார்கள்.

அமெரிக்காவில் ஒரு வாரத்தின் வசூலில் முதல் 15 இடங்களுக்குள் வந்திருக்கிறது இப்படம். இதற்கு முன்னர் ஷாருக்கானின் 'சென்னை எக்ஸ்பிரஸ்', ரன்பீர் கபூரின் 'Yeh Jawaani Hai Deewani' ஆகியவை மட்டுமே இப்பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றன.

இந்தி திரையுலகின் வசூலை கணக்கிடும் விமர்சகர்கள் பலரும், இப்படத்தின் வசூலைப் பார்த்து ட்விட்டர் தளத்தில் தங்களது கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

இயக்குநர் ராம் கோபால் வர்மா “இந்திய திரையுலகில் முதன் முறையாக, ஹாலிவுட் தயாரிப்பாளர்கள் பலரும் ஒரு தெலுங்கு படத்தினை வசூலை கண்காணித்து வருகிறார்கள்.

'Attarintiki Daredi' படத்தின் வசூலைப் பார்த்து அதிர்ந்து விட்டதாக இந்தி திரையுலக விமர்சகர் தரண் ஆதர்ஷ் என்னிடம் கூறினார். உலகில் பல இடங்களில் 'சென்னை எக்ஸ்பிரஸ்' வசூலை 'Attarintiki Daredi' முறியடித்திருக்கிறது.

இமயமலையின் உச்சியினை தொட்டுவிட்டார் பவன்கல்யாண். ஆனால் 40 வருடங்களாகியும் சிரஞ்சீவி இன்னும் அம்மலையின் அடிவாரத்தில் தான் இருக்கிறார். 'மெகா ஸ்டார்' போன்ற பட்டமெல்லாம் 'பவர் ஸ்டார்' முன்னால் சிறிதாகிவிட்டது. பவன் கல்யாணிற்கு 'சுனாமி ஸ்டார்' என்று பெயரை மாற்ற வேண்டும்.

'Seethamma Vaakitlo Sirimalle Chettu' படத்தின் மொத்த வசூல்,'Attarintiki Daredi' படத்தின் 3 நாள் வசூலை விட குறைவு தான்.

இந்தளவிற்கு படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பு, பவன் கல்யாணினால் அல்ல, அவர் மீது மக்கள் வைத்திருக்கும் அன்பினால் தான் என்பதை பவன் உணர்வார் என நம்புகிறேன்.” என்று தன் பங்கிற்கு பிரச்னைக்கு ஆரம்பப்புள்ளி வைத்திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x