Last Updated : 16 Nov, 2025 09:30 PM

2  

Published : 16 Nov 2025 09:30 PM
Last Updated : 16 Nov 2025 09:30 PM

“எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை” - இயக்குநர் ராஜமவுலி பகிர்வு!

தனக்கு கடவுள் மீது நம்பிக்கை இல்லை என இயக்குநர் ராஜமவுலி தெரிவித்துள்ளார்.

எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் படம் ‘வாரணாசி’. இந்​தப் படத்​துக்​காக ‘குளோப் டிரோட்​டர்’ என்ற சாகச உலகத்​தைப் படக்​குழு உருவாக்​கி​யுள்​ளது. இதற்​கான விழாவை ஹைதரா​பாத்​தில் நேற்று (நவ.15) ஏற்பாடு செய்தது படக்குழு. இந்த நிகழ்வில் படத்தின் தலைப்பையும் அது தொடர்பான அறிமுக டீசரையும் படக்குழு வெளியிட்டது.

இந்த நிகழ்வில் ராஜமவுலி பேசிய விஷயங்கள் சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளன. அவர் பேசியதாவது: “இது எனக்கு ஒரு உணர்வுபூர்வமான தருணம். எனக்கு கடவுள் மீது நம்பிக்கை இல்லை. என் அப்பா அனுமன் நமக்கு பின்னால் இருந்து அனைத்தையும் கவனித்துக்கொள்வார் என்றார். அவர் இப்படித்தான் கவனித்துக்கொள்கிறாரா - இதை நினைத்து எனக்கு கோபம் வருகிறது. என் மனைவிக்கும் அனுமன் மீது அன்பு உண்டு. அவர் ஒரு நண்பரைப் போல அவருடன் உரையாடுகிறார். எனக்கும் அவர் மீது கோபம் வருகிறது. என் அப்பா அனுமனைப் பற்றிப் பேசி, படத்தின் வெற்றிக்கு அனுமனின் ஆசீர்வாதங்களை நம்பியிருக்கச் சொன்னபோது, ​​எனக்கு மிகவும் கோபம் வந்தது” இவ்வாறு ராஜமவுலி பேசினார்.

‘வாரணாசி’ நிகழ்வின் போது ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினைகள் குறிப்பிட்டு ராஜமவுலியின் இவ்வாறு பேசியது சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளது. இது குறித்து பதிவிட்டுள்ள பயனர் ஒருவர், “ராஜமவுலியின் பேச்சு நியாயமில்லை. கடவுள் நம்பிக்கை இல்லை என்று சொல்பவர், தன் படத்துக்கு 'வாரணாசி' என்று தலைப்பிட்டு புராணக் கதாபாத்திரங்களைப் பயன்படுத்தியது ஏன்? இப்படி ஒரு மதிப்புமிக்க நபரிடமிருந்து இதனை எதிர்பார்க்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

அந்த நிகழ்வில் மேலும் பேசிய ராஜமவுலி, “என் குழந்தைப் பருவத்திலிருந்தே, ராமாயணமும் மகாபாரதமும் எனக்கு எவ்வளவு பிடிக்கும், அவற்றை உருவாக்குவது என் கனவுத் திட்டம் என்பதைப் பற்றி நான் பலமுறை பேசியிருக்கிறேன். ராமாயணத்தின் ஒரு முக்கியமான அத்தியாயத்தை இவ்வளவு சீக்கிரம் படமாக்க முடியும் என்று நான் ஒருபோதும் நினைத்துப் பார்த்ததில்லை. ஒவ்வொரு காட்சியையும் ஒவ்வொரு வசனத்தையும் எழுதும்போது, ​​நான் மிதப்பது போல் உணர்ந்தேன்” என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x