Published : 08 Nov 2025 02:17 PM
Last Updated : 08 Nov 2025 02:17 PM

‘காந்தா’ 1950-களில் நடக்கும் கதை

துல்​கர் சல்​மான், பாக்ய போர்​சே, சமுத்​திரக்​க​னி, ராணா உள்பட பலர் நடித்​துள்ள படம் ‘காந்​தா’. செல்​வ​மணி செல்​வ​ராஜ் இயக்​கி​யுள்​ளார். நவ. 14-ல் வெளி​யாகும் இப்​படத்​தின் டிரெய்​லர் வெளி​யீட்டு விழா சென்​னை​யில் நடை​பெற்​றது.

நடிகர் துல்​கர் சல்​மான் பேசும்​போது, “இந்​தப் படத்​தின் கதையை 2019-ல் தான் கேட்​டேன். தமிழ் சினி​மா​வின் நம்​பிக்கை நட்​சத்​திர​மாக இயக்​குநர் செல்​வ​மணி செல்​வ​ராஜ் இருப்​பார். இந்​தப் படத்​தில் நடிக்க வேண்​டும் என்று ஆசை​யாக காத்​திருந்​தேன்.

எங்​கள் எல்​லோருக்​கும் தமிழில் மிக முக்​கிய​மான படமாக ‘காந்​தா’ இருக்​கும். ‘அய்​யா’ கதா​பாத்​திரத்​துக்கு மிகப்​பொருத்​த​மான நபராக சமுத்​திரக்​கனி இருந்​தார். எங்​களை விட இன்​னும் அதிக ஆர்​வ​மாக சமுத்​திரக்​கனி இந்​தப் படத்​தில் நடித்​துக் கொடுத்​தார். அவருடன் இணைந்து இன்​னும் நிறைய படங்​கள் நடிக்க வேண்​டும். டைம் டிராவல் செய்​வது போன்ற மகிழ்ச்​சியை பீரியட் படங்​கள் கொடுக்​கும். இப்​பட​மும் அப்​படியொரு அனுபவத்​தைக் கொடுத்​தது” என்​றார்.

இயக்​குநர் செல்​வ​மணி செல்​வராஜ் பேசும்​போது, “1950-களில் இருந்த ஆளு​மை​கள், அவர்​களுக்​குள் இருந்த மனப்​போ​ராட்​டம் இவற்றை வடிவ​மைத்து படமாக்கி இருக்​கிறேன். சினி​மாவை நேசித்த ஓர் அணி இருந்​த​தால் இந்​தப் படத்தை சாத்​தி​ய​மாக்க முடிந்​தது” என்​றார். படக்​குழு​வினர்​ கலந்​து​கொண்​டனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x