Published : 08 Nov 2025 01:30 PM
Last Updated : 08 Nov 2025 01:30 PM

சிறந்த  நடிகர் நீங்கள்தான்! - பிருத்விராஜை புகழும் ராஜமவுலி

‘ஆர்​.ஆர்​.ஆர்’ படத்​தின் பிரம்​மாண்ட வெற்​றிக்​குப் பிறகு மகேஷ்​பாபு ஹீரோ​வாக நடிக்​கும் படத்தை இயக்கி வரு​கிறார், இயக்​குநர் ராஜமவுலி. இதில் வில்​ல​னாக நடிக்​கும் பிருத்​வி​ராஜின் முதல் தோற்ற போஸ்​டரை ராஜமவுலி வெளி​யிட்​டுள்​ளார். அவர் ‘கும்​பா’ என்ற கதா​பாத்​திரத்​தில் நடிக்​கிறார்.

இதுபற்றி ராஜமவுலி வெளி​யிட்​டுள்ள பதி​வில், ” பிருத்​வி​ராஜுடன் முதல் ‘ஷாட்​’டை எடுத்த பிறகு, நான் பார்த்​த​திலேயே மிகச்​சிறந்த நடிகர் நீங்​கள்​தான் எனச் சொன்​னேன். இந்​தக் கொடுமை​யான, இரக்​கமற்ற, சக்​தி​வாய்ந்த எதிரி​யான ‘கும்​பா’வுக்கு உயிர் கொடுத்​தது திருப்​தி​கர​மாக இருந்​தது. இப்​படத்​தில் இணைந்​ததற்கு நன்​றி” என்று தெரி​வித்​துள்​ளார்​.

இந்​தப் படத்​துக்​காக ‘குளோப் டிரோட்​டர்’ என்ற சாகச உலகத்​தைப் படக்​குழு உருவாக்​கி​யுள்​ளது. இதற்​கான விழா ஐதரா​பாத்​தில் நவ.15-ம் தேதி நடை​பெற இருக்​கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x