Last Updated : 03 Nov, 2025 10:59 PM

 

Published : 03 Nov 2025 10:59 PM
Last Updated : 03 Nov 2025 10:59 PM

விருதுகளை குவித்த ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’, சிறந்த நடிகர் மம்மூட்டி - கேரள அரசின் திரைப்பட விருதுகள் முழு பட்டியல்!

55வது கேரள மாநில அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ திரைப்படம் அதிக விருதுகளை குவித்துள்ளது. ‘பிரம்மயுகம்’ படத்துக்காக மம்மூட்டிக்கு சிறந்த நடிகர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சூரில் உள்ள ராமநிலயத்தில் நடைபெற்ற இந்த விழாவில், கேரள கலாச்சாரம் மற்றும் திரைப்படத்துறை அமைச்சர் சஜி செரியன் வெற்றியாளர்களை அறிவித்தார். நடிகர் பிரகாஷ் ராஜ் தலைமையிலான ஏழு பேர் கொண்ட நடுவர் குழு இந்த விழாவில் கலந்து கொண்டது.

சிறந்த நடிகர் விருதை வென்றதன் மூலம் 7 முறை கேரள அரசின் சிறந்த நடிகர் விருதை வென்ற ஒரே நடிகர் என்ற பெருமையை மம்மூட்டி பெற்றுள்ளார். அவருக்கு அடுத்தபடியாக மோகன்லால், ஊர்வசி இருவரும் 6 முறை வென்றுள்ளனர்.
வெற்றியாளர்களின் முழு பட்டியல்:

  • சிறந்த நடிகர் : 'பிரம்மயுகம்' படத்துக்காக மம்மூட்டி
  • சிறந்த நடிகை: 'ஃபெமினிச்சி பாத்திமா' படத்துக்காக ஷம்லா ஹம்சா
  • சிறந்த இயக்குநர்: 'மஞ்ஞும்மல் பாய்ஸ்' படத்துக்காக சிதம்பரம்
  • சிறந்த குணச்சித்திர கலைஞர் (பெண்): 'நாடன்ன சம்பவம்' படத்துக்காக லிஜோமோல் ஜோஸ்
  • சிறந்த குணச்சித்திர நடிகர் (ஆண்): சவுபின் ஷாஹிர் ('மஞ்ஞும்மல் பாய்ஸ்') மற்றும் சித்தார்த் பரதன் ('பிரம்மயுகம்')
  • நடிப்புக்கான சிறப்பு ஜூரி விருது (ஆண்): 'ARM' மற்றும் 'கிஷ்கிந்தா காண்டம்' படங்களுக்காக டோவினோ தாமஸ் மற்றும் ஆசிப் அலி
  • நடிப்புக்கான சிறப்பு ஜூரி விருது (பெண்): 'போகேன்வில்லா' படத்துக்காக ஜோதிர்மயி மற்றும் 'பாரடைஸ்' படத்துக்காக தர்ஷனா ராஜேந்திரன்
  • சிறந்த இரண்டாவது படம்: 'ஃபெமினிச்சி பாத்திமா'
  • சிறந்த அறிமுக இயக்குனர்: 'ஃபெமினிச்சி பாத்திமா' படத்துக்காக ஃபாசில் முகமது
  • சிறந்த பிரபலமான திரைப்படம்: 'பிரேமலு'
  • சிறப்பு ஜூரி பெண்கள்/திருநங்கைகளுக்கான விருது: 'ஆல் வி இமேஜின் அஸ் லைட்' படத்துக்கா பாயல் கபாடியா
  • சிறந்த கதை: 'பாரடைஸ்' படத்துக்காக பிரசன்னா விதானேஜ்
  • சிறந்த திரைக்கதை: 'போகன்வில்லா' படத்துக்காக லாஜோ ஜோஸ் மற்றும் அமல் நீரட்
  • சிறந்த VFX: 'ஏஆர்எம்’
  • சிறந்த நடன இயக்குனர்: 'போகன்வில்லா' படத்துக்காக சுமேஷ் சுந்தர், ஜிஷ்ணுதாஸ் எம்.வி.
  • சிறந்த ஆடை வடிவமைப்பு: 'ரேகசித்ரம்' மற்றும் 'போகன்வில்லா' படங்களுக்காக சமீரா சனீஷ்
  • சிறந்த ஒப்பனை கலைஞர்: 'போகன்வில்லா' மற்றும் 'பிரம்மயுகம்' படங்களுக்காக ரோனெக்ஸ் சேவியர்
  • சிறந்த ஒத்திசைவு ஒலி: 'பானி'
  • சிறந்த இசையமைப்பாளர்: 'போகன்வில்லா' படத்துக்காக சுஷின் ஷ்யாம்
  • சிறந்த பின்னணி இசை: 'பிரம்மயுகம்' படத்துக்காக கிறிஸ்டோ சேவியர்
  • சிறந்த ஒளிப்பதிவு: 'மஞ்ஞும்மல் பாய்ஸ்' படத்துக்காக ஷைஜு காலித்
  • சிறந்த பாடலாசிரியர் (ஆண்): 'மஞ்ஞும்மல் பாய்ஸ்' மற்றும் 'குத்தந்திரம்' படங்களுக்காக வேடன்
  • சிறந்த பின்னணி பாடகி: 'அம் ஆ' படத்தின் 'ஆரோரம்' பாடலுக்காக ஜெபா டாமி
  • சிறந்த பின்னணி பாடகர்: 'ஏஆர்எம்' படத்தின் 'கிளியே' பாடலுக்காக கே.எஸ். ஹரிசங்கர்
  • சிறந்த ஒலிக்கலவை: ஃபசல் பக்கர், ஷைஜின் மெல்வின் ஹட்டன் (மஞ்ஞும்மல் பாய்ஸ்)
  • சிறந்த ஒலி வடிவமைப்பு: ஷிபின் மெல்வின் மற்றும் அபிஷேக் நாயர் (மஞ்ஞும்மல் பாய்ஸ்)
  • சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு: 'மஞ்ஞும்மல் பாய்ஸ்' படத்துக்காக அஜயன் சாலிசேரி
  • சிறந்த எடிட்டர்: 'கிஷ்கிந்தா காண்டம்' படத்துக்காக சூரஜ் இஎஸ்
  • சிறந்த கலை இயக்கம்: 'மஞ்ஞும்மல் பாய்ஸ்' படத்துக்காக அஜயன் சாலிசேரி
  • சிறந்த டப்பிங் கலைஞர் (பெண்): 'பரோஸ்' படத்துக்காக சயோனாரா பிலிப்
  • சிறந்த டப்பிங் கலைஞர் (ஆண்): 'பரோஸ்' படத்துக்காக பாசி வைக்கம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x