Published : 02 Nov 2025 01:22 PM
Last Updated : 02 Nov 2025 01:22 PM

காதலியை மணக்கிறார் நடிகர் அல்லு சிரிஷ்

தமிழில் ராதா மோகன் இயக்கிய ‘பயணம்’ படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் அல்லு சிரிஷ்.

பிரபல தயாரிப்பாளர் அல்லு அரவிந்தின் மகனும் நடிகர் அல்லு அர்ஜுனின் சகோதரருமான அல்லு சிரிஷ், சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். இவர் ஐதராபாத்தைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஒருவரின் மகள் நைனிகாவைக் காதலித்து வந்தார். இவர்களுக்கு ஐதராபாத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இந்த விழாவில் நடிகர்கள் சிரஞ்சீவி, அல்லு அர்ஜுன், ராம் சரண் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். நிச்சயதார்த்தப் புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கத்தில், அல்லு சிரிஷ் வெளியிட்டுள்ளார். ரசிகர்கள், திரையுலகினர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். திருமண தேதி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x