Published : 01 Nov 2025 01:44 PM
Last Updated : 01 Nov 2025 01:44 PM

‘மஹாகாளி’ தோற்றத்தில் மிரட்டிய பூமி ஷெட்டி

தேஜா சஜ்ஜா நடித்​து வெற்​றி பெற்​ற ’ஹனு​மான்​’ திரைப்​படத்​தின்​ மூலம் கவனம்​ பெற்​றவர்​ இயக்​குநர்​ பிர​சாந்த்​ வர்​மா.

அவர்​ தனது ‘பிர​சாந்த்​ வர்​மா சினி​மாட்​டிக்​ யுனிவர்​ஸ்​’ மூலம்​ 5 படங்​களை உரு​வாக்க இருப்​பதாகக்​ கூறி​யிருந்​தார். அதன்​படி ரிஷப்​ ஷெட்​டி நடிப்​பில்​ ‘ஜெய்​ ஹனு​மான்​’ என்​றப்​ படத்​தை இயக்​கி வரு​கிறார்​. மேலும்​, மஹா​காளி, சிம்​பா, ஆதி​ரா ஆகிய படங்​களை​யும்​ அவர்​ உரு​வாக்​கி வருகிறார்​.

இந்​நிலை​யில்​ அவருடைய யுனிவர்​ஸின்​ 3-வது படமான ‘மஹா​காளி’ படத்​தின்​ முதல் தோற்​றம்​ வெளி​யாகி உள்​ளது. இந்​தப்​ படத்​துக்​கான கதையை பிர​சாந்த்​ வர்​மா எழு​தி​யுள்​ளார்​. பூஜா அபர்​ணா கொல்​லூரு இயக்​கு​கிறார்​. ஆர்​கே துக்​கல்​, ரிவாஸ்​ ரமேஷ் துக்​கல்​ ஆகியோரின்​ ஆதர​வுடன்​, ஆர்​கேடி ஸ்டூடியோஸ்​ தயாரிக்
​கிறது.

இதில்​ மஹா​காளி​யாக பூமி ஷெட்​டி நடிக்​கிறார்​. வித்​தி​யாச​மான அவர்​ தோற்​றம்​ ரசிகர்​களைக்​ கவர்ந்​துள்​ளது. இதையடுத்​து பூமி ஷெட்​டி சமூக வலை​தளங்​களில்​ டிரெண்டானார்​. கன்​னட நடிகை​யான இவர்​, ‘இக்​கட்​’, தெலுங்​கில்​ விஜய்​ தேவர​கொண்​டா​வின்​ கிங்​டம்​ உள்​பட சில படங்​களில்​ நடித்​துள்​ளார்​.

‘மஹா​காளி’ படத்​தின்​ படப்​பிடிப்​பு 50 சதவீதம்​ முடிவடைந்​துள்​ள நிலை​யில்​ அடுத்​தக்​கட்​ட படப்பிடிப்​பு, ஐதரா​பாத்​தில்​ பிரம்​​மாண்​ட செட்​டில்​ நடை​பெற்​று வரு​கிறது என்​று படக்​குழு தெரி​வித்​துள்​ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x