Published : 28 Oct 2025 03:31 PM
Last Updated : 28 Oct 2025 03:31 PM
சமந்தா நடித்து தயாரிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு த்ரிலாலா பிக்சர்ஸ் என்ற பெயரில் புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றிணைத் தொடங்கினார் சமந்தா. அந்த நிறுவனத்தின் மூலமாக ‘மா இண்டி பங்காரம்’ என்ற படத்தை தயாரிக்க இருப்பதாகவும் கூறியிருந்தார். ஆனால், அதற்கு பிறகு அப்படத்தின் நிலை என்ன என்பது தெரியாமல் இருந்தது.
தற்போது ‘மா இண்டி பங்காரம்’ படத்தின் படப்பிடிப்பு படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. நந்தினி ரெட்டி இயக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவாளராக ஓம் பிரகாஷ், இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஆகியோர் பணிபுரியவுள்ளனர். ஒரே கட்டமாக இதன் படப்பிடிப்பை முடிக்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. குல்ஷன் தேவையா, கவுதமி உள்ளிட்ட பலர் சமந்தாவுடன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
தனது தயாரிப்பு நிறுவனத்தில் முதலாவதாக ‘சுபம்’ என்ற படத்தினை வெளியிட்டார் சமந்தா. குறைந்த முதலீட்டில் உருவாக்கப்பட்ட அப்படம் வசூல் ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றது. அப்படத்தினை முழுமையாக கைப்பற்றி தனது தயாரிப்பு நிறுவனம் மூலமாக வெளியிட்டு வெற்றி பெற்றார். அவரது தயாரிப்பு நிறுவனத்தில் முதல் தயாரிப்பாக ‘மா இண்டி பங்காரம்’ படமே உருவாகவுள்ளது.
Started our journey with the Muhurtham of #MaaIntiBangaram, surrounded by love & blessings.
We can’t wait to share with you what we’re creating… need all your love and support as we begin this special film. #MIB #Samantha #TralalaMovingPictures @TralalaPictures… pic.twitter.com/PwICPNsP8R— Samantha (@Samanthaprabhu2) October 27, 2025
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT