Published : 19 Oct 2025 12:45 PM
Last Updated : 19 Oct 2025 12:45 PM

‘ஹால்’ படத்துக்கு கிறிஸ்தவ அமைப்பு கடும் எதிர்ப்பு - படத்தை பார்வையிட நீதிமன்றம் முடிவு

ஷேன் நிகாம் கதா​நாயக​னாக நடித்​துள்ள மலை​யாளப் படம், ‘ஹால்’. இதை அறி​முக இயக்​குநர் வீரா இயக்​கி​யுள்​ளார். சாக்ஷி வைத்யா நாயகி​யாக நடித்​துள்​ளார். இந்​தப் படம் மலை​யாளம், தமிழ், இந்​தி, தெலுங்​கு, கன்​னட மொழிகளில் செப்​.12-ல் வெளி​யாகும் என அறிவிக்​கப்​பட்​டிருந்​தது.

ஆனால், படத்​தில் இடம்​பெறும் மட்​டிறைச்சி பிரி​யாணி காட்சி மற்​றும் 15 வசனக் காட்​சிகளை நீக்க வேண்​டும் என்று தணிக்கை வாரி​யம் கூறியது. படக்​குழு மறுப்பு தெரி​வித்​த​தால் சான்​றிதழ் வழங்​கப்​பட​வில்​லை. அதை எதிர்த்​து, ‘ஹால்’ படக்​குழு கேரள உயர் நீதி​மன்​றத்​தில் வழக்​குத் தொடுத்​தது. அதோடு, ‘ஹால்’ திரைப்​படத்தை நீதி​மன்​றமோ அல்​லது அவர்​கள் நியமிக்​கும் பிர​தி​நி​தியோ பார்க்க வேண்​டும் என்று கோரிக்​கை​யும் வைக்​கப்​பட்​டது.

இதற்​கிடையே, இந்​தப் படத்​தில் ஆட்​சேபனைக்​குரிய கருத்​துகள் இருப்​ப​தாகக் கூறி கிறிஸ்தவ அமைப்​பு, மனு தாக்கல் செய்​தது. அதில், சமூக மற்​றும் வகுப்​பு​வாத நல்​லிணக்​கத்​துக்கு அச்​சுறுத்​தலாக இப்​படத்​தின் காட்​சிகள் இருக்​கின்றன என்​றும் ‘லவ் ஜிகாத்’ கருத்தை ஊக்​கு​விப்​ப​தாக​வும் தாமரச்​சேரி பிஷப்​பை, லவ் ஜிகாத் ஆதர​வாள​ராகச் சித்​தரித்​திருப்​ப​தாக​வும் கூறி​யிருந்​தனர்.

மேலும் அத்​தகைய காட்​சிகள் அனு​ம​திக்​கப்​பட்​டு, படம் வெளி​யா​னால் அது கிறிஸ்தவ சமூகத்தின் மத உணர்​வு​களைப் புண்​படுத்​தும் என்​றும் அமைதி மற்​றும் நல்​லிணக்​கத்​தைச் சீர்​குலைக்​கும் என்​றும் அம்​மனு​வில் கூறி​யிருந்​தனர். வழக்கை விசா​ரித்த நீதிபதி வி.ஜி.அருண், படத்​தைப் பார்க்க வேண்​டும் என்ற தயாரிப்​பாளரின் கோரிக்​கையை அக். 21-ம் தேதி நீதி​மன்​றம் பரிசீலிக்​கும் என்​றும் திரை​யிடலின் போது, தணிக்கை வாரிய அதி​காரி​கள் உள்​ளிட்​டோர் பங்​கேற்க வேண்​டுமென​வும்​ அறி​வுறுத்​தி​யுள்​ளார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x