Published : 15 Oct 2025 07:46 AM
Last Updated : 15 Oct 2025 07:46 AM

படப்பிடிப்பில் மாரடைப்பு: கன்னட நடிகர் ராஜு தலிகோட்டே மரணம்

சினிமா படப்​பிடிப்​பின்​போது மாரடைப்பு ஏற்​பட்​ட​தால் கன்னட நகைச்​சுவை நடிகரும் இயக்​குநரு​மான ராஜு தலிகோட்டே (62) மரணமடைந்​தார்.

சிறு​வய​திலேயே மேடை நாடகங்​களில் நடித்து வந்த ராஜு தலிகோட்​டே, ‘ஹெண்​டத்தி அந்த்ரே ஹெண்​டத்​தி’ படம் மூலம் நடிக​ராக அறி​முக​மா​னார். பெரும்​பாலும் நகைச்​சுவை வேடங்​களில் நடித்து வந்​தார். மனசா​ரே, பஞ்​சா​ரங்​கி, ராஜ​தானி, மைனா, டோபி​வாலா, பஞ்​சாபி ஹவுஸ் என பல படங்​களில் நடித்​துள்​ளார். ‘பிக் பாஸ்’ கன்னட நிகழ்ச்​சி​யிலும் பங்​கேற்​றுள்ள அவர், தொடர்ந்து நாடகங்​களி​லும் நடித்து வந்​தார்.

படப்​பிடிப்பு ஒன்​றுக்​காக அவர் உடுப்பி சென்​றிருந்​தார். திங்​கள்​கிழமை அவருக்குத் திடீரென நெஞ்​சுவலி ஏற்​பட்​டது. அரு​கில் உள்ள மருத்​து​வ​மனை​யில் சேர்த்​தனர். ஆனால், அவர் ஏற்​கெனவே உயிரிழந்து விட்​ட​தாக மருத்​து​வர்​கள் தெரி​வித்​தனர். அவர் மறைவுக்​குக் கன்னட சூப்​பர் ஸ்டா​ரான சிவ ராஜ்கு​மார் உள்பட நடிகர், நடிகைகளும் கர்​நாடகத் துணை முதல்​வர் சிவக்​கு​மார், முன்​னாள் முதல்​வர் பசவ​ராஜ் பொம்மை உள்ளிட்ட அரசி​யல் தலை​வர்​களும் இரங்​கல் தெரி​வித்​துள்​ளனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x