Published : 09 Oct 2025 06:06 AM
Last Updated : 09 Oct 2025 06:06 AM

சொகுசு கார்கள் இறக்குமதி செய்த விவகாரம்: துல்கர் சல்மான் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை

சென்னை: பூ​டானில் இருந்து சொகுசு கார்​கள் இறக்​குமதி செய்த விவ​காரம் தொடர்​பாக சென்​னை​யில் நடிகர் துல்​கர் சல்​மான், அவரது தந்தை மம்​முட்​டி​யின் வீடு, அலு​வல​கம் உட்பட தமிழகம், கேரளா​வில் மொத்​தம் 17 இடங்​களில் அமலாக்​கத் துறை அதி​காரி​கள் சோதனை நடத்​தி​யுள்​ளனர்.

மலை​யாள திரை​யுல​கின் முன்​னணி கதா​நாயர்​களில் ஒரு​வர் துல்​கர் சல்​மான். பிரபல நடிகர் மம்​முட்​டி​யின் மகனான இவர், தயாரிப்​பாள​ராக​வும் உள்​ளார். இந்​நிலை​யில், துல்​கர் சல்​மான் போலி ஆவணங்​கள் மூல​மாக சொகுசு கார்​களை குறைந்த விலைக்கு வாங்​கிய​தாக​ சுங்​கத்​துறை அதி​காரி​களுக்கு புகார் சென்​றது.

இதையடுத்​து, அவரது வீட்டில் சுங்​கத்​துறை அதி​காரி​கள் சமீபத்​தில் சோதனை நடத்​தினர். இதில், பூடான் நாட்டு ராணுவம் பயன்​படுத்​திய ‘லேண்ட் ரோவர்’ போன்ற பழைய சொகுசு கார்​களை குறைந்த விலைக்கு வாங்​கி, அதை இந்​தி​யா​வில் மறு​ப​திவு செய்​து, வரிஏய்ப்பு செய்​தது தெரிய​வந்​தது.
இந்​நிலை​யில், இந்த விவ​காரத்​தில் சட்ட விரோத பணப் பரிவர்த்​தனை தடுப்பு சட்​டத்​தின்​கீழ் அமலாக்​கத் துறை தனி​யாக வழக்கு பதிவு செய்​தது.

இதன் தொடர்ச்​சி​யாக, துல்​கர் சல்​மான் தொடர்​புடைய இடங்​களில் அமலாக்​கத் துறை அதி​காரி​கள் நேற்று சோதனை நடத்​தினர். சென்னை ராஜா அண்​ணா​மலை புரத்​தில் உள்ள துல்​கர் சல்​மான் வீடு, அவரது தந்தை மம்​முட்​டி​யின் வீடு, அலு​வல​கத்​தில் சோதனை நடந்​தது. தமிழகம், கேரளா​வில் நேற்று ஒரே நேரத்​தில் 17 இடங்​களில் சோதனை நடத்​தப்​பட்​டுள்​ளது.

இந்த சோதனை​யில், சொகுசு கார்​கள் இறக்​குமதி செய்​ததற்​கான ஆவணங்​கள், வங்கி கணக்கு விவரங்​கள், கார்​கள் விற்​பனை செய்​யப்​பட்​டதற்​கான ஆவணங்​கள் உள்​ளிட்ட பல்​வேறு முக்​கிய ஆவணங்​கள் பறி​முதல் செய்​ததாக கூறப்​படு​கிறது. சோதனை முடிவடைந்த பிறகே, முழு விவரங்​கள்​ வெளி​யாகும்​ என்​று கூறப்​படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x