Published : 07 Oct 2025 08:11 AM
Last Updated : 07 Oct 2025 08:11 AM

‘காந்தாரா: சாப்டர் 1’ - 4 நாட்களில் ரூ.335 கோடி வசூல்!

ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கியுள்ள திரைப்படம், ‘காந்தாரா: சாப்டர் 1’. கடந்த 2022-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற ‘காந்தாரா’ படத்தின் முதல் பாகமாக உருவாகியுள்ள இதில் ருக்மணி வசந்த், ஜெயராம், குல்ஷன் தேவய்யா, சம்பத் ராம் உள்பட பலர் நடித்துள்ளனர்.

அக்.2-ம் தேதி வெளியான இந்தப் படம் பார்வையாளர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. வெளியான 3 நாட்களில், உலகம் முழுவதும் ரூ.235 கோடி வசூலித்த இந்தப் படம் 4-வது நாளில் ரூ.335 கோடியை எட்டியுள்ளது.

இதன் மூலம் 4 நாட்களில் அதிகம் வசூலித்த 3-வது கன்னடப் படமாக இது மாறியுள்ளது. முன்னதாக ‘காந்தாரா’, ‘கே.ஜி.எஃப் 2’ படங்கள் 4 நாட்களில் இதை விட அதிகம் வசூலித்திருந்தன. இந்தப் படம் ரூ.1000 கோடி வசூலை எட்டும் என்கிறார்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x