Published : 23 Sep 2025 07:17 AM
Last Updated : 23 Sep 2025 07:17 AM

த்ரிஷ்யம் 3 படப்பிடிப்பு கொச்சியில் தொடக்கம்!

மோகன்​லால், மீனா, ஆஷா சரத், எஸ்​தர் அனில் உட்பட பலர் நடிப்​பில் 2013-ம் ஆண்டு வெளி​யான மலை​யாளப் படம் ‘த்​ரிஷ்​யம்’. ஜீத்து ஜோசப் இயக்​கிய இந்​தப் படம் வரவேற்​பைப் பெற்​றதை அடுத்​து, தமிழ், தெலுங்​கு, இந்தி உள்பட பல்​வேறு மொழிகளில் ரீமேக் செய்​யப்​பட்​டன. தமிழில் கமல்​ஹாசன், கவுதமி நடிப்​பில் ‘பாப​நாசம்’ என்ற பெயரில் உரு​வாகி வெற்றி பெற்​றது.

இதன் இரண்​டாம் பாகமான ‘த்​ரிஷ்​யம் 2’ படமும் வெளி​யாகி நல்ல வரவேற்​பைப் பெற்​றது. அதைத்தொடர்ந்து ‘த்​ரிஷ்​யம் 3’ உரு​வாக இருப்​ப​தாக இயக்​குநர் ஜீத்து ஜோசப், மோகன்​லால் ஆகியோர் கூறி வந்​தனர். இந்​நிலை​யில் ‘த்​ரிஷ்​யம் 3’ படத்​தின் படப்​பிடிப்பு கொச்சி புறநகர் பகு​தி​யில் பூஜை​யுடன் நேற்று தொடங்​கியது.

மோகன்​லால், ஜீத்து ஜோசப், தயாரிப்​பாளர் அந்​தோணி பெரும்​பாவூர் உள்பட படக்​குழு​வினர் கலந்து கொண்​டனர். 55 நாட்​களில் படப்​பிடிப்பை முடிக்​கத் திட்​ட​மிட்​டுள்​ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x