Published : 20 Sep 2025 10:27 PM
Last Updated : 20 Sep 2025 10:27 PM
கொச்சி: தனக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவித்த மத்திய அரசுக்கு மோகன்லால் நன்றி தெரிவித்துள்ளார்
நடிகர் மோகன்லால் சினிமாவுக்கு ஆற்றிய பங்களிப்பை சிறப்பிக்கும் விதமாக, இந்திய சினிமாவில் மிக உயரிய விருதாக கருதப்படும் தாதாசாகேப் பால்கே விருதை அவருக்கு அறிவித்துள்ளது மத்திய அரசு. செப்டம்பர் 23-ம் தேதி நடைபெறும் 71-வது தேசிய விருதுகள் விழாவில், இவ்விருது அவருக்கு வழங்கப்பட உள்ளது.
இந்த நிலையில் தனக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவித்த மத்திய அரசுக்கு மோகன்லால் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “தாதாசாகேப் பால்கே விருதை மிக பணிவுடன் ஏற்கிறேன். இந்தப் பெருமை எனக்கானது மட்டுமல்ல. இந்தப் பயணத்தில் என்னுடன் இருந்த ஒவ்வொருவருக்கும் உரியது.
எனது குடும்பத்தினர், ரசிகர்கள், சக கலைஞர்கள், நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகள் என அனைவருக்கும். உங்கள் அன்பு, நம்பிக்கை மற்றும் ஊக்கம் எனது மிகப்பெரிய பலமாக இருந்து, இன்று நான் யார் என்பதை வடிவமைத்துள்ளன. இந்த அங்கீகாரத்தை நான் நன்றியுடனும், முழு மனதுடனும் ஏற்றுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இந்திய சினிமாவில் ஆகச் சிறந்த நடிகர்களில் ஒருவராக இருப்பவர் மோகன்லால். மலையாள சினிமாவில் முன்னணி நடிகராகவும் வலம் வருகிறார். இவர் 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். திரைப்படத் துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்புக்காக 2001-ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும், 20190ஆம் ஆண்டு பத்ம பூஷன் விருதும் அவருக்கு வழங்கப்பட்டது.
பிரதமர் மோடி, நடிகர் மம்மூட்டி உள்ளிட்ட பலரும் மோகன்லாலுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
On the recommendation of the Dadasaheb Phalke Award Selection Committee, the Government of India is pleased to announce that Shri. Mohanlal will be conferred the prestigious Dadasaheb Phalke Award 2023.
Mohanlal’s remarkable cinematic journey inspires generations!
The… pic.twitter.com/n1L9t5WQuP— Ministry of Information and Broadcasting (@MIB_India) September 20, 2025
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT