Published : 06 Sep 2025 10:22 PM
Last Updated : 06 Sep 2025 10:22 PM
கொச்சி: கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ள ‘லோகா’ திரைப்படம் ரூ.150 கோடி வசூலை நெருங்கியுள்ளது.
துல்கர் சல்மான் தயாரிப்பில் வெளியாகியுள்ள படம் ‘லோகா சாப்டர் 1: சந்திரா’. இதில் கல்யாணி பிரியதர்ஷன் சூப்பர் ஹீரோவாக நடித்திருக்கிறார். ‘பிரேமலு’ நஸ்லன், சாண்டி, சந்து சலீம் குமார், அருண் குரியன், சாந்தி பாலச்சந்திரன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு ஜேக்ஸ் பீஜாய் இசை அமைத்துள்ளார்.
மோகன்லால் நடித்த ‘ஹ்ருதயபூர்வம்’ மற்றும் ஃபகத் பாசில் நடித்த ‘ஓடும் குதிர சாடும் குதிர’ ஆகிய படங்களுடன் இந்த படமும் வெளியானது. ஆனால் மற்ற இரண்டு படங்களை விட ‘லோகா’ படத்துக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.
முதல் நாளில் 250 திரையரங்குகளில் வெளியான ‘லோகா’, அடுத்த நாளில் இருந்து 325 திரையரங்குகளாக அதிகரிக்கப்பட்டது. தொடர்ந்து சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களிலும் கூட திரைகள் இப்படத்துக்கு அதிகரிக்கப்பட்டன.
கடந்த ஆகஸ்ட் 28 வெளியான இப்படம் அதிவேகமாக ரூ.100 கோடியை நெருங்கிய மலையாளப்படங்களில் ஒன்று என்ற பெருமையை பெற்றது. இந்த நிலையில் வெளியான 9 நாட்களில் இப்படம் ரூ.130 கோடி வசூலை கடந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை இப்படம் இந்தியாவில் மட்டும் ரூ.70 கோடி வசூல் செய்துள்ளது. இந்த வார இறுதியில் இப்படம் ரூ.150 கோடி வசூலை கடந்து விடும் என்றும் விரைவில் இப்படம் ரூ.200 கோடியை நெருங்கி விடும் என்றும் சினிமா நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT