Published : 14 Aug 2025 11:01 AM
Last Updated : 14 Aug 2025 11:01 AM
தெலங்கானா மாநில அரசு தடை செய்துள்ள சட்ட விரோத ஆன்லைன் விளையாட்டு செயலிகளை விளம்பரப்படுத்திய விவகாரத்தில், பண மோசடி நடந்திருக்கலாம் என்று அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.
இது தொடர்பாக அந்த விளம்பரங்களில் நடித்த விஜய் தேவரகொண்டா, ராணா, பிரகாஷ் ராஜ், லட்சுமி மன்சு, நித்தி அகர்வால் உள்பட 29 திரை பிரபலங்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்திருந்தது. அவர்களுக்கு சம்மனும் அனுப்பி இருந்தது.
பிரகாஷ் ராஜ், விஜய தேவர கொண்டா, ராணா ஆகியோர் ஏற்கெனவே விசாரணைக்கு ஆஜராகி விளக்கமளித்தனர். இதன் தொடர்ச்சியாக நடிகை லட்சுமி மன்சு அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேற்று ஆஜராகி விளக்கம் அளித்தார். அவர் வாக்குமூலங்களை அதிகாரிகள் பதிவு செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT