Published : 28 Jul 2025 09:04 AM
Last Updated : 28 Jul 2025 09:04 AM

ராஷ்மிகா மந்தனா படத்துக்கு ஹாலிவுட் ஸ்டன்ட் இயக்குநர்

ராஷ்மிகா மந்தனா நடிக்கும் படம் ‘மைசா’. நாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட கதையான இதை அறிமுக இயக்குநர் ரவீந்திர புள்ளே இயக்குகிறார். அன்ஃபார்முலா பிலிம்ஸ் தயாரிக்கிறது. தெலுங்கு, தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தின் முதல் தோற்றம் ஏற்கெனவே வெளியாகி வரவேற்பைப் பெற்றது. ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்துக்கு பிரபல ஹாலிவுட் ஸ்டன்ட் இயக்குநரும் ஜாக்கி சான் படங்களில் பணியாற்றியவருமான ஆன்டி லாங் சண்டைக் காட்சிகளை அமைக்கிறார்.

இவர் பிரபாஸ் நடித்த 'கல்கி2898 ஏடி' மற்றும் சில இந்தி படங்களிலும் பணியாற்றியுள்ளார். இந்நிலையில் இதன் தொடக்க விழா பூஜை ஹைதராபாத் அன்னபூர்ணா ஸ்டூடியோவில் நேற்று நடந்தது. பிரபல தயாரிப்பாளர் ராமாநாயுடு கிளாப் அடித்து தொடங்கி வைத்தார். நடிகை ராஷ்மிகா மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

முன்னதாக இந்தப் படம் பற்றி இயக்குநர் ரவீந்திர புள்ளே கூறும்போது, “இதன் கதை, கதாபாத்திரங்கள், கலை நுணுக்கம் என அனைத்தும் ரசிகர்களைக் கவரும். கோண்ட் பழங்குடியினரின் சுவாரஸ்யமான உலகத்தை மையமாகக் கொண்ட உணர்ச்சிகரமான ஆக்‌ஷன் த்ரில்லர் படம்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x