Published : 11 Jul 2025 01:55 PM
Last Updated : 11 Jul 2025 01:55 PM
ப்ரைம் வீடியோவில் ஜூலை 18-ம் தேதி ‘குபேரா’ வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘குபேரா’. அனைத்து மொழிகளிலும் வெளியான இப்படம் தெலுங்கில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தமிழில் எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை. இப்படத்தினை ஏசியன் சினிமாஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.
தற்போது இப்படம் ஜூலை 18-ம் தேதி ப்ரைம் வீடியோவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் தனுஷ் நடிப்புக்கு கண்டிப்பாக தேசிய விருது கிடைக்கும் என்று பலரும் பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் திரையரங்கில் பார்க்காதவர்கள் பலரும் ஓடிடி வெளியீட்டுக்காக காத்திருந்தார்கள்.
’குபேரா’ வெற்றியினைத் தொடர்ந்து, தற்போது விக்னேஷ் ராஜா படத்தின் பணிகளை படப்பூஜையுடன் தொடங்கியிருக்கிறார் தனுஷ். வேல்ஸ் நிறுவனம் மற்றும் திங்க் ஸ்டூடியோஸ் இணைந்து இப்படத்தினை தயாரித்து வருகிறது.
a simple man, and the not so simple journey of his redemption arc #KuberaaOnPrime, July 18@dhanushkraja KING @iamnagarjuna @iamRashmika @jimSarbh @sekharkammula @ThisIsDSP @mynameisraahul @AdityaMusic @KuberaaTheMovie @SVCLLP @amigoscreation pic.twitter.com/lVCjhi6YO4
— prime video IN (@PrimeVideoIN) July 11, 2025
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT