Last Updated : 28 Jun, 2025 11:04 PM

 

Published : 28 Jun 2025 11:04 PM
Last Updated : 28 Jun 2025 11:04 PM

இந்திய அளவில் ரூ.16 கோடி மட்டுமே வசூல் செய்த ‘கண்ணப்பா’

விஷ்ணு மன்சு நடித்துள்ள ‘கண்ணப்பா’ திரைப்படம் இந்திய அளவில் 2 நாட்களில் ரூ.16 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது.

தெலுங்கு நடிகர் விஷ்ணு மன்சு நடித்துள்ள புராண படம், ‘கண்ணப்பா’. இந்திப் பட இயக்குநர் முகேஷ் குமார் சிங் இயக்கியுள்ளார். இதில், சரத்குமார், பிரீத்திமுகுந்தன், மோகன்பாபு, மது,கருணாஸ், பிரம்மாஜி, பிரம்மானந்தம் உள்பட பலர் நடித்துள்ளனர். சிறப்புத் தோற்றத்தில் மோகன்லால், பிரபாஸ், காஜல் அகர்வால், அக்ஷய்குமார் எனபலர் நடித்துள்ளனர். பான் இந்தியா முறையில் உருவான இந்தப் படம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று திரையரங்குகளில் வெளியானது.

இப்படம் இந்தியாவில் முதல் நாளில் ரூ.9.35 கோடி வசூல் செய்திருந்த நிலையில், இரண்டாவது நாளான இன்று ரூ.7 கோடி வசூலித்துள்ளது. இதன்படி இரண்டு நாட்களில் இந்திய அளவில் இப்படம் ரூ.16.35 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. இப்படம் முதல் நாளில் தமிழில் ரூ.15 லட்சம், தெலுங்கில் ரூ.8.25 கோடி, இந்தியில் ரூ.65 லட்சம், மலையாளத்தில் ரூ.20 லட்சம் வசூலித்தது.

இந்திய அளவில் பிரபலமான நடிகர் பட்டாளம், பெரிய பட்ஜெட், பிரம்மாண்ட ப்ரோமோஷன்கள் என செலவு செய்தும் படம் இவ்வளவு குறைவான வசூலை செய்திருப்பது படக்குழுவினரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x