Published : 21 Jun 2025 10:53 PM
Last Updated : 21 Jun 2025 10:53 PM
மோகன்லால் நடிப்பில் பெரும் வரவேற்பை பெற்ற ‘த்ரிஷ்யம்’ படத்தின் 3ஆம் பாகத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் தொடங்க இருப்பதாக படக்குழு உறுதி செய்துள்ளது.
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் 2013-ம் ஆண்டு வெளியான படம் 'த்ரிஷ்யம்'. ஒரு சாதாரண மனிதன் தனது குடும்பத்தைப் பாதுகாக்க எதிர்கொள்ளும் சவால்கள், எதிர்பாராத திருப்பங்களே த்ரிஷ்யம் படத்தின் கதை. மலையாளத்தில் வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, சிங்களம் உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. சீன மொழியில் ரீமேக் செய்யப்பட்ட முதல் இந்தியப் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், ‘த்ரிஷ்யம்’ மற்றும் ‘த்ரிஷ்யம் 2’ படங்கள் ஹாலிவுட்டிலும் ரீமேக் செய்யப்பட இருக்கிறது. 2013-ல் த்ரிஷ்யம் முதல் பாகத்தின் இந்தி ரீமேக்கை தயாரித்த பனோரமா ஸ்டூடியோஸ் இன்டர்நேஷனல் லிமிமெட் நிறுவனம், அமெரிக்க நிறுவனங்களான கல்ஃப்ஸ்ட்ரீம் பிக்சர்ஸ் மற்றும் ஜோட் பிலிம்ஸ் உடன் இணைந்து ஹாலிவுட்டில் தயாரிக்க உள்ளது.
கொரியன் மொழியில் த்ரிஷ்யம் ரீமேக் செய்யப்பட்ட நிலையில், 10 நாடுகளின் மொழிகளில் ‘த்ரிஷ்யம்’ படங்களை ரீமேக் செய்ய பனோரமா நிறுவனம் முடிவு செய்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இப்படத்தின் மூன்றாம் பாகம் உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது இதன் படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் தொடங்க இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
October 2025 — the camera turns back to Georgekutty.
— Mohanlal (@Mohanlal) June 21, 2025
The past never stays silent.#Drishyam3 pic.twitter.com/8ugmxmb2wO
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT