Published : 14 Jun 2025 08:35 AM
Last Updated : 14 Jun 2025 08:35 AM

பிரபாஸின் ‘த ராஜா சாப்’ படக்குழு எச்சரிக்கை

பிரபாஸ் தற்போது நடித்துள்ள படம், ‘த ராஜா சாப்’. ரொமான்டிக் ஹாரர் காமெடி படமான இதை மாருதி இயக்கி உள்ளார். தெலுங்கு, தமிழ், இந்தியில் உருவாகும் இந்தப் படத்தில் மாளவிகா மோகனன், நித்தி அகர்வால், ரித்தி குமார் என பலர் நடித்துள்ளனர்.

கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு தமன் இசை அமைத்துள்ளார். இதன் டீஸர் வெளியீட்டு விழா ஜூன் 16-ம் தேதி நடக்க இருக்கிறது. அதற்குள் இந்த படத்தில் இருந்து 20 நொடி காட்சிகளின் வீடியோ இணையத்தில் கசிந்தது. இதையடுத்து படக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதில், ‘த ராஜா சாப்’ படத்திலிருந்து கசிந்த காட்சிகள் எந்த சமூக ஊடகங்களிலாவது காணப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அந்த கணக்குகளை முடக்க நடவடிக்கை எடுப்போம். இந்த விஷயத்தில் அனைவரும் படக்குழுவுக்கு ஒத்துழைக்க வேண்டும்” என்று படக்குழுவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x