Published : 09 Apr 2025 09:14 AM
Last Updated : 09 Apr 2025 09:14 AM
கடந்த 2022-ம் ஆண்டு அசோக் தேஜா இயக்கத்தில் வெளியான தெலுங்கு படம் ‘ஒடேலா ரயில்வே ஸ்டேஷன்’ (Odela Railway Station). தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. முதல் பாகத்தை இயக்கிய அசோக் தேஜா இந்தப் படத்தையும் இயக்கியுள்ளார். ஹெபா படேல், வசிஷ்ட என் சிம்ஹா,நாக மகேஷ், வம்சி, ஆகியோர் நடித்துள்ளனர்.. ‘காந்தாரா’ புகழ் அஜனேஷ் லோக்நாத் படத்துக்கு இசையமைக்கிறார். இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் தமன்னா நடித்துள்ளார். படம் வரும் ஏப்ரல் 27 உலகெங்கும் வெளியாகிறது.
ட்ரெய்லர் எப்படி? - ஒடேலா என்ற கிராமத்தில் இருக்கும் மனிதர்களை குறிப்பாக பெண்களை தீய ஆத்மா ஒன்று துன்புறுத்துகிறது. இதனை தடுக்கும் பேராற்றல் கொண்டவராக தமன்னா வருகிறார். முதல் பாகத்தை க்ரைம் த்ரில்லராக எடுத்த அசோக் தேஜா இப்படத்தை முழுக்க முழுக்க பக்தி, திகில் பாணியில் இயக்கியுள்ளார். ட்ரெய்லரில் வரும் பல காட்சிகள் அனுஷ்கா நடித்த ‘அருந்ததீ’ படத்தை நினைவூட்டுகின்றன. தமிழ் ட்ரெய்லரின் வரும் வசனங்கள் தமிழை கொலை செய்து கொடூரமாக எழுதப்பட்டுள்ளன.
“விஷக்காற்றா மாறி ஒடேலாவை சுத்தி வளைப்பேன்” “ஊரை தாக்குறதுக்கு முன்னாடி அந்த விஷத்தை முழுங்கிருவேன்”. ”நாம நிக்கிறதுக்கு தேவை கோமாதா, வாழ்றதுக்கு தேவை கோமாதா”, ”நீங்க வாழ மாட்டை கொல்ல வேண்டிய அவசியம் இல்ல, அதோட கோமியத்தை குடிச்சு கூட பொழைச்சிக்க முடியும்” இப்படியாகவே ட்ரெய்லர் முழுக்க வசனங்கள் வருகின்றன. தமிழ் வசனங்களில் கவனம் செலுத்தியிருக்கலாம். படத்திலும் இப்படித்தான் வசனங்கள் இடம்பெறப் போகின்றதா என்பதை ரிலீஸ் அன்றுதான் பார்க்க வேண்டும். ‘ஒடேலா 2’ ட்ரெய்லர் வீடியோ:
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT