Published : 03 Jul 2018 01:24 PM
Last Updated : 03 Jul 2018 01:24 PM
விஜய் தேவரகொண்டா நடிக்கும் அடுத்த படத்துக்கு ‘டியர் காம்ரேட்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
துணை நடிகராக நடிக்கத் தொடங்கி, ‘பெல்லி சூப்புலு’ படத்தின் மூலம் ஹீரோ ஆனவர் விஜய் தேவரகொண்டா. கடந்த வருடம் இவர் நடிப்பில் வெளியான ‘அர்ஜுன் ரெட்டி’, சூப்பர் டூப்பர் ஹிட். பல மொழிகளிலும் இந்தப் படத்தை ரீமேக் செய்து வருகின்றனர்.
தமிழில் ‘வர்மா’ என்ற பெயரில் இந்தப் படத்தை ரீமேக் செய்து வருகிறார் பாலா. விக்ரம் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக அறிமுகமாகும் இந்தப் படத்தில், ‘சில்லுனு ஒரு காதல்’ படத்தில் சூர்யா - ஜோதிகா மகளாக நடித்த ஸ்ரேயா ஷர்மா ஹீரோயினாக நடிக்கலாம் என்கிறார்கள்.
விஜய் தேவரகொண்டா நடிப்பில் தற்போது ‘டாக்ஸிவாலா’ படம் ரிலீஸுக்குத் தயாராக இருக்கிறது. அதைத் தொடர்ந்து ‘கீதா கோவிந்தம்’ என்ற படமும் தயாராகி வருகிறது.
இந்நிலையில், விஜய் தேவரகொண்டா அடுத்ததாக நடிக்கும் படத்துக்கு ‘டியர் காம்ரேட்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. பரத் கம்மா இயக்கும் இந்தப் படத்தில், கல்லூரி மாணவனாக நடிக்கிறார் விஜய் தேவரகொண்டா. அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மண்டன்னா நடிக்கிறார். ‘கீதா கோவிந்தம்’ படத்தில் இவர்கள் இருவரும் ஜோடியாக நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகிவரும் ‘நோட்டா’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் விஜய் தேவரகொண்டா. ஆனந்த் சங்கர் இயக்கிவரும் இந்தப் படத்தில், மெஹ்ரீன் ஹீரோயினாக நடிக்கிறார். அரசியலை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகி வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT