Published : 15 Mar 2025 10:38 PM
Last Updated : 15 Mar 2025 10:38 PM
‘கோர்ட் – எ ஸ்டேட் Vs எ நோபடி’ படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருப்பதால் படக்குழு மகிழ்ச்சியில் இருக்கிறது.
மார்ச் 14-ம் தேதி நானி தயாரிப்பில் வெளியாகிவுள்ள படம் ‘கோர்ட் – எ ஸ்டேட் Vs எ நோபடி’. இப்படத்தினை விளம்பரப்படுத்தும் போது நானி பேசியது, ட்ரெய்லருக்கு கிடைத்த வரவேற்பு உள்ளிட்டவற்றால் எதிர்பார்ப்பு இருந்தது. மேலும், பட வெளியீட்டுக்கு முன்னரே பத்திரிகையாளர்களுக்கு திரையிட்டு காட்டப்பட்டது. இதன் விமர்சனங்கள் மூலம் படத்துக்கு மேலும் எதிர்பார்ப்பு அதிகரித்தது.
ரவி தேஜா உள்ளிட்ட முன்னணி தெலுங்கு திரையுலகினருக்கு படத்துக்கு பெரும் பாராட்டு தெரிவித்தார்கள். இதனால் முதல் நாள் மற்றும் ப்ரீமியர் காட்சிகள் ஆகியவற்றின் மூலம் 8.1 கோடி வசூல் செய்திருக்கிறது. இந்த வரவேற்பினால் படக்குழு பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். இதன் வெற்றிக்கான சந்திப்பு ஹைதராபாத்தில் இன்று நடைபெறவுள்ளது.
ராம் ஜெகதீஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கோர்ட் – எ ஸ்டேட் Vs எ நோபடி’. இதில் ப்ரியதர்ஷி, ஹர்ஷ் ரோஷன், சாய் குமார், ரோகிணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதனை நானி தயாரித்துள்ளார்.
BLOCKBUSTER VERDICT FOR #Court #CourtTelugu collects a gross of 8.10 + CRORES WORLDWIDE on Day 1 with premieres included
— Wall Poster Cinema (@walpostercinema) March 15, 2025
Book your tickets now!
https://t.co/C8ZZHbyhHW#CourtStateVsANobody
Presented by Natural Star @NameisNani
Starring @PriyadarshiPN… pic.twitter.com/Xt6O91Y7CK
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT