Published : 13 Mar 2025 10:50 PM
Last Updated : 13 Mar 2025 10:50 PM
மகேஷ் பாபு படக்குழுவினரை ஒடிசா துணை முதல்வர் வரவேற்று பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு ஒடிசாவில் நடைபெற்று வருகிறது. இதன் படப்பிடிப்பு காட்சிகள் இணையத்தில் லீக் ஆனதால் தற்போது 3 கட்ட பாதுகாப்பு உடன் படப்பிடிப்பை நடத்தி வருகிறது படக்குழு. இதனிடையே, மகேஷ்பாபு படக்குழுவினருக்கு ஒடிசா துணை முதல்வர் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஒடிசா துணை முதல்வர் பார்வதி தனது எக்ஸ் தள பதிவில் “இதற்கு முன், மல்கங்கிரியில் புஷ்பா-2, இப்போது, பிரபல இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வரும் ‘SSMB29’ திரைப்படம், தென்னக சூப்பர் ஸ்டார்களான மகேஷ் பாபு மற்றும் பிருத்விராஜ் சுகுமாரன், சர்வதேச அளவில் புகழ் பெற்ற நடிகை பிரியங்கா சோப்ரா ஆகியோருடன் கோராபுட்டில் படமாக்கப்பட்டு வருகிறது.
இது ஒடிசாவின் சுற்றுலாவுக்கு பெரும் ஊக்கத்தை அளிக்கும். இந்த இடம் ஒரு முக்கிய படப்பிடிப்பு தளமாக மாறும். ஒடிசாவின் திறனை ஆராய்ந்து முழு ஆதரவு தரவும் மற்றும் உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்புக்கு உறுதியளிக்கவும் அனைத்து திரைப்படத் துறைகளையும் நாங்கள் இங்கு வரவேற்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
இந்தப் பதிவின் மூலம் பிரித்விராஜ், பிரியங்கா சோப்ரா ஆகியோருடன் மகேஷ் பாபு நடித்து வருவதை உறுதி செய்திருக்கிறார். ஆனால், இதுவரை இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு எதையுமே ராஜமவுலி வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Before, Pushpa-2 in Malkangiri, and now, renowned director SS Rajamouli's upcoming film SSMB29, starring South superstars Mahesh Babu and Prithviraj Sukumaran, along with internationally acclaimed actress Priyanka Chopra, is being shot in Koraput, proving that Odisha has a wealth…
— Pravati Parida (@PravatiPOdisha) March 11, 2025
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT