Published : 12 Feb 2025 08:40 AM
Last Updated : 12 Feb 2025 08:40 AM

இயக்குநர் சனலுக்கு எதிராக நடிகை ரகசிய வாக்குமூலம்!

மலையாள இயக்குநர் சனல் குமார் சசிதரன், கடந்த 2022-ம் ஆண்டு, நடிகை ஒருவரைக் காணவில்லை என்றும், அவரது உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்றும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டார். இது தொடர்பாக அந்த நடிகை கொடுத்த புகாரில் அவர் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில், “சமூக ஊடகங்களில் வெளியிடும் பதிவுகள் மூலம் தன்னை அவமதித்தும் டேக் செய்தும் தனது பெயரில் ஆடியோ குறிப்புகளையும் சனல் குமார் சசிதரன் தவறாகப் பகிர்ந்து வருகிறார்” என அந்த நடிகை சில நாட்களுக்கு முன் கொச்சி எலமக்கரா போலீஸில் புகார் கூறியிருந்தார். இந்த வழக்கில் சனல் குமார் சசிதரனுக்கு எதிராக, ஆலுவா ஜூடிசியல் முதல் வகுப்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், அந்த நடிகை ரகசிய வாக்குமூலம் அளித்தார். அதை நீதிமன்றம் பதிவு செய்தது.

சனல் குமார் சசிதரன் தற்போது அமெரிக்காவில் இருப்பதாகவும் அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x