Published : 04 Feb 2025 04:35 PM
Last Updated : 04 Feb 2025 04:35 PM
ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்த ‘கேம் சேஞ்சர்’ திரைப்படம் ஓடிடியில் பிப்ரவரி 7-ம் தேதி ரிலீஸ் ஆகிறது.
‘கேம் சேஞ்சர்’ படம் ஜனவர் 10 அன்று வெளிவந்தது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு தயாரித்திருந்தார். தமன் இசையமைத்திருந்தார். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் கியாரா அத்வானி, எஸ்.ஜே. சூர்யா, ஜெயராம், சமுத்திரக்கனி, ஸ்ரீ காந்த், அஞ்சலி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
ஆந்திரப் பிரதேசத்தின் முதல்வர் பொப்பிலி சத்யமூர்த்தி (ஸ்ரீகாந்த்) உடல் நலக்குறைவால் மருத்துவமனைக்கு செல்லும்போது, பாலம் இடிந்து விழுவதால் அவர் உயிரிழக்கிறார். அவரின் மரணத்துக்குப் பிறகு, அவரது மகன் மோப்பி தேவி (எஸ்.ஜே. சூர்யா) அடுத்த முதல்வராக ஆவதற்காக முயற்சிக்கிறார். இந்நிலையில், நேர்மையான ஐஏஎஸ் அதிகாரி ராம் நந்தன் (ராம் சரண்) விசாகப்பட்டினம் மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்று, அங்கு நடைபெறும் ஊழல் செயல்களை எதிர்த்து போராடுகிறார். அவரது நடவடிக்கைகள் மோப்பி தேவியின் அரசியல் ஆசைகளுக்கு தடையாக மாறுகின்றன. இது இருவருக்கும் இடையில் மோதலை ஏற்படுத்துகிறது. அதற்குப் பிந்தைய நகர்வுகளே திரைக்கதை.
அரசியல் கதைக்களத்தில் உருவான இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய தோல்வியை சந்தித்து. இந்தப் படத்தின் ஒடிடி உரிமையை அமேசான் ப்ரைம் வீடியோ நிறுவனம் கைப்பற்றியிருந்தது. தற்போது, ‘கேம் சேஞ்சர்’ திரைப்படத்தின் ஒடிடி ரிலீஸ் தேதியை அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, பிப்ரவரி 7-ம் தேதி முதல் அப்படம் ஸ்ட்ரீம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT