Published : 23 Jan 2025 10:08 AM
Last Updated : 23 Jan 2025 10:08 AM

கணவரை பிரிந்தார் அபர்ணா வினோத்!

மலையாள நடிகையான அபர்ணா வினோத், தமிழில் விஜய்யின் ‘பைரவா’ படத்தில், கீர்த்தி சுரேஷின் தோழியாக நடித்துள்ளார். பின் பரத் நடித்த ‘நடுவன்’ படத்தில் நாயகியாக நடித்தார். ரினில் ராஜ் என்பவரைக் காதலித்து வந்த இவர், கடந்த 2023-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். திருமணமாகி 2 வருடம் முடிந்த நிலையில் தனது காதல் கணவரை விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளார்.

இதுபற்றி தனது இன்ஸ்டாவில் குறிப்பிட்டுள்ள அவர், “நீண்ட யோசனைக்குப் பிறகு நான் என் திருமணப் பந்தத்தை முடித்துக் கொள்ளும் முடிவை எடுத்திருக்கிறேன். இது எளிதான விஷயமல்ல என்றாலும் என் வளர்ச்சிக்கும் என் காயம் குணமாவதற்கும் இதுவே சரியானதாக இருக்கும் என்றும் நம்புகிறேன். முன்னேற்றத்தை நோக்கி நகர்வதற்காக இந்த முடிவை எடுத்துள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x