Published : 22 Jan 2025 08:59 AM
Last Updated : 22 Jan 2025 08:59 AM

சுதீப்பின் ‘மேக்ஸ்’ 2-ம் பாகம் உருவாகிறதா?

கிச்சா சுதீப் கதாநாயகனாக நடித்து வெளியான படம், ‘மேக்ஸ்’. வி கிரியேஷன்ஸ் சார்​பில் கலைப்புலி எஸ் தாணு தயாரித்தார். விஜய் கார்த்திகேயா இயக்கிய இந்தப் படம் கன்னடம், தமிழ், தெலுங்​கில் உருவானது. கன்னடத்​தில் வரவேற்​பைப் பெற்றுள்ள இந்தப் படத்​தின் அடுத்த பாகம் விரை​வில் உருவாக இருப்பதாகக் கூறப்படு​கிறது.

இதுபற்றி இயக்​குநர் விஜய் கார்த்தி​கே​யா​விடம் கேட்​ட​போது, “இந்தப் படம் கன்னடத்​தில் பெரிய வெற்றி பெற்றுள்​ளது. இன்னும் அங்கு ஓடிக் கொண்டிருக்​கிறது. இந்தப் படம் உருவாக, கதையை நம்பிய தயாரிப்​பாளர் தாணு சாரும் கிச்சா சுதீப்பும்​தான் காரணம். அவர்கள் கொடுத்த நம்பிக்கையில்​தான் இந்தப் படம் வெற்றி பெற்றிருக்​கிறது. ஹீரோ கிச்சா சுதீப் மீண்​டும் சேர்ந்து படம் பண்ணலாம் என்று என்னிடம் கூறியிருக்கிறார். மேலும் சில தயாரிப்பு நிறு​வனங்கள் கன்னடத்​தி​லும் தமிழிலும் படம் இயக்க பேசிக்​கொண்​டிருக்​கிறார்​கள்.

ஒவ்வொரு இயக்​குநருக்​கும் இரண்​டாவது படம் முக்​கி​யம். அதனால், அடுத்த படத்தை இன்னும் சிறப்பாக உருவாக்க நினைத்​திருக்​கிறேன். அது ‘மேக்ஸ்’ படத்​தின் இரண்​டாம் பாகமாக இருக்குமா என்பது பற்றி இன்னும் ​முடிவு செய்ய​வில்​லை” என்​றார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x