Published : 19 Jan 2025 09:09 PM
Last Updated : 19 Jan 2025 09:09 PM
‘பிரேமலு’ 2-ம் பாகத்தின் படப்பிடிப்பு திட்டங்கள் என்ன என்பது தெரியவந்துள்ளது.
மலையாளத்தில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘பிரேமலு’. இதன் வெற்றியைத் தொடர்ந்து 2-ம் பாகம் உடனடியாக அறிவிக்கப்பட்டது. ஆனால், எப்போது படப்பிடிப்பு, வெளியீடு என்ற எதுவுமே தெரியாமல் இருந்தது. தற்போது ஜூனில் படப்பிடிப்பு தொடங்கி, டிசம்பரில் வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது. இதன் படப்பிடிப்புக்கான இடங்கள் மற்றும் நடிகர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த தகவலை ‘பிரேமலு’ படத்தை தயாரித்த பாவனா ஸ்டூடியோஸ் நிறுவனம் உறுதிப்படுத்தி இருக்கிறது. இந்நிறுவனம் தயாரித்துள்ள ‘BROMANCE’ திரைப்படம் பிப்ரவரி 14-ம் தேதி வெளியாகவுள்ளது. இது தொடர்பான சந்திப்பில் தான் ‘பிரேமலு 2’ படம் குறித்த திட்டங்களை தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
மலையாளத்தில் ‘தண்ணீர் மத்தான் தினங்கள்’, ‘சூப்பர் சரண்யா’ படங்களின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் கிரிஷ் ஏடி இயக்கத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘பிரமேலு’. நஸ்லன் கே.கஃபூர், மமிதா பைஜு நடித்துள்ள இப்படத்துக்கு விஷ்ணு விஜய் இசையமைத்துள்ளார். மேத்யூ தாமஸ், ஷ்யாம் புஸ்கரன் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளனர்.
ஃபஹத் பாசில், ஷ்யாம் புஸ்கரன், திலேஷ் போத்தன் ஆகிய மூவரும் இணைந்து படத்தை தயாரித்துள்ளனர். ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. ரூ.10 கோடிக்கும் குறைவான பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் படம், உலக அளவில் ரூ.130 கோடி வரை வசூலித்தது. டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் தற்போது காணக் கிடைக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT