Published : 04 Dec 2024 05:22 PM
Last Updated : 04 Dec 2024 05:22 PM
ஹைதராபாத்: நாக சைதன்யா - சோபிதா துலிபாலா திருமணம் புதன்கிழமை இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது. இந்த திருமணத்தில் நடிகர்கள் மகேஷ்பாபு, ராம் சரண், நயன்தாரா உள்ளிட்ட திரையுலகைச் சேர்ந்த பலரும் கலந்துகொள்கின்றனர்.
பழம்பெரும் நடிகர் மறைந்த நாகேஸ்வர ராவின் மகன் நாகார்ஜுனா. இவர் தெலுங்கு திரையுலகில் மூத்த மற்றும் முன்னணி நடிகராக உள்ளார். நாகார்ஜுனா மகனும் நடிகருமான நாக சைதன்யாவும், நடிகை சமந்தாவும் 2017-ல் திருமணம் செய்து கொண்டனர். 2021-ல் மனக்கசப்புக் காரணமாக இருவரும் பிரிந்தனர்.
இதனிடையே, நாக சைதன்யாவுக்கு மறுமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் விரும்பினர். பல வருடங்களாக நண்பர்களாக பழகி வந்த சோபிதா துலிபாலாவுக்கும், நாக சைதன்யாவுக்கும் கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. சோபிதா துலிபாலா ‘பொன்னியின் செல்வன்’ உட்பட பல தமிழ், தெலுங்கு, மலையாளம் படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், இவர்களின் திருமணம் ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டூடியோவில் புதன்கிழமை இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது. இந்த திருமணத்தில் சிரஞ்சீவி, பிரபாஸ், ராஜமவுலி, ஒலிம்பிக் பதக்கம் வென்ற பி.வி.சிந்து, ராம்சரண், நயன்தாரா, மகேஷ்பாபு உள்ளிட்ட பலர் கலந்துகொள்கின்றனர். முன்னதாக ஹல்தி நிகழ்வு நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT