Published : 26 Oct 2024 03:17 AM
Last Updated : 26 Oct 2024 03:17 AM

‘லக்கி பாஸ்கர்’ தாமதம் ஏன்? - துல்கர் சல்மான் விளக்கம்

துல்கர் சல்மான், மீனாட்சி சவுத்ரி, ராம்கி உட்பட பலர் நடித்துள்ள படம், ‘லக்கி பாஸ்கர்’. வெங்கி அட்லூரி இயக்கியுள்ள இந்தப் படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. தெலுங்கில் உருவாகியுள்ள இந்தப் படம், தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் தீபாவளியை முன்னிட்டு வரும் 31-ம் தேதி வெளியாகிறது. இதற்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ளார்.

இந்தப் படம் பற்றி துல்கர் சல்மான் கூறும்போது, “இதில் வரும் பாஸ்கர் கேரக்டர் எல்லோருக்கும் கனெக்ட் ஆகும். இந்த வருடம் ஓரிரு படங்களில் நடிக்க இருந்தேன். ஒன்று ரத்தாகிவிட்டது. மற்றொன்று கடைசி நேரத்தில் நடக்கவில்லை. இடையில் எனக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால்தான் இந்தப் படம் கொஞ்சம் தாமதமாகி விட்டது. படத்துக்குப் பிரம்மாண்ட செட் போட்டிருந்தார்கள். அதனால் உடல் நலக்குறைவு என்றாலும் எப்படியாவது நடிக்கிறேன் என்றேன். ஆனால், தயாரிப்பாளரும் இயக்குநரும் வேண்டாம் என்று சொல்லிவிட்டு ஆதரவாக இருந்தார்கள். நடிகர் ராம்கி சாரின் பெரிய ரசிகன் நான். அவருடைய கதாபாத்திரம் படத்தில் மிக முக்கியமானது. நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழுக்கு வந்திருக்கிறேன் என்பதால் இந்தப் படம் மனதுக்கு நெருக்கமாக உள்ளது” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x