Published : 23 Oct 2024 09:19 AM
Last Updated : 23 Oct 2024 09:19 AM

பிரபாஸ் படங்களுக்கு ரூ.2,100 கோடி முதலீடு

நடிகர் பிரபாஸ் ‘பாகுபலி’ படத்துக்குப் பிறகு பான் இந்தியா நடிகராக மாறினார். அவர் நடிக்கும் படங்கள், தெலுங்கு, இந்தி, தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் வெளியாகி வருகிறது. அவர் நடித்து கடந்த மே மாதம் வெளியான ‘கல்கி 2898 ஏடி’ படம் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. இதில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி உட்பட பலர் நடித்திருந்தனர்.

இதையடுத்து அவர், பிரசாந்த் நீலுடன் ‘சலார்2’, ‘கல்கி 2829 ஏடி2-ம்பாகம்’, மாருதி இயக்கும் ‘ராஜாசாப்’, சந்தீப் ரெட்டி வங்கா இயக்கும் ‘ஸ்பிரிட்’ ஹனு ராகவபுடி இயக்கும்படங்களில் நடித்து வருகிறார். இவை அனைத்தும் மெகா பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. இந்தப் படங்களுக்கு ரூ.2,100 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பிரபாஸின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் இதை சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x