Published : 23 Sep 2024 02:41 PM
Last Updated : 23 Sep 2024 02:41 PM

கேரளாவில் வெளியாகி வரவேற்பை பெறும் ‘ஆல் வி இமேஜின் அஸ் லைட்’

திருவனந்தபுரம்: பாயல் கபாடியா இயக்கியுள்ள ‘ஆல் வி இமேஜின் அஸ் லைட்’ மலையாள படம் செப்டம்பர் 21-ம் தேதி கேரளாவில் உள்ள குறிப்பிட்ட திரையரங்குகளில் வெளியானது. அதன் வரவேற்பை பொறுத்து இந்தியா முழுவதும் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

பிரான்ஸில் நடைபெற்ற 77-வது கான் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு உயரிய விருதான கிராண்ட் பிரிக்ஸ் விருதை பெற்றது இப்படம். கனி குஸ்ருதி, திவ்யா பிரபா, சாயா கதம், ஹ்ருது ஹாரூன் மற்றும் அஜீஸ் நெடுமங்காட் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. இந்தியாவிலிருந்து சாக் மற்றும் சீஸ் பிலிம்ஸ் மற்றும் பிரான்சின் பெட்டிட் கேயாஸ் ஆகியவற்றுக்கு இடையேயான அதிகாரபூர்வ இந்தோ-பிரெஞ்சு கூட்டுத் தயாரிப்பாக இப்படம் உருவாகியுள்ளது. ராணா டகுபதியின் ஸ்பிரிட் மீடியா நிறுவனம் இந்தப் படத்தின் இந்திய விநியோக உரிமையைப் பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படம் கேரளாவில் குறிப்பிட்ட சில திரையரங்குகளில் முதல் கட்டமாக கடந்த செப்டம்பர் 21-ம் தேதி வெளியானது. தொடர்ந்து விரைவில் இந்தியா முழுவதும் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

படத்தின் ரிலீஸ் குறித்து இயக்குநர் பாயல் கபாடியா கூறுகையில், “கேரளாவில் இருந்து மும்பைக்கு தங்கள் வாழ்க்கை லட்சியத்தை அடைய இரண்டு பெண்கள் வருகிறார்கள் என்பதுதான் படத்தின் கரு. எனவே, படத்தை திரையரங்குகளில் பார்க்கும் முதல் மாநிலம் கேரளாவாக இருக்க வேண்டும் என்பதுதான் பொருத்தமாக இருக்கும். இதற்கடுத்து, இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் உள்ள மக்கள் படம் பார்க்க இருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சியாக உள்ளது.” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x