Published : 09 Jul 2024 03:55 PM
Last Updated : 09 Jul 2024 03:55 PM
பெங்களூரு: சிவராஜ்குமார் நடிப்பில் உருவாகி வரும் ‘பைரவனா கோனே பாடா’ (Bhairavana Kone Paata) கன்னடப் படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.
இயக்குநர் ஹேமந்த் ராவ் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான ‘Sapta Sagaradaache Ello - Side A’ கன்னடப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகமும் வெளியாகி ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்றது. இரண்டு படங்களும் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் காணக்கிடைக்கிறது.
இந்நிலையில் இப்படத்தின் இயக்குநர் ஹேமந்த் ராவ் அடுத்ததாக சிவராஜ்குமாரை வைத்து புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இப்படத்தை வைஷாக் கவுடா தயாரிக்கிறார். படத்துக்கு ‘பைரவனா கோனே பாடா’ (Bhairavana Kone Paata) என தலைப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் போஸ்டரை பொறுத்தவரை தாடி, மீசையை வைத்துக் கொண்டு வித்தியாசமான தோற்றத்தில் கவனம் பெறுகிறார் சிவராஜ்குமார்.
மேலும் அவர் அணிந்திருக்கும் உடையின் மூலம் படம் வரலாற்று பின்னணியில் உருவாவது தெரிகிறது. முன்னதாக இயக்குநர் ஹேமந்த் ராவ் பேசுகையில், “இந்தப் படம் சிவராஜ்குமாரை வித்தியாசமான தோற்றத்தில் காட்சிப்படுத்தும்” என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Bhairava is here!!!#BhairavanaKonePaaTa #BKP #VaishakJFilms #Shivarajkumar @hemanthrao11 #VaishakJGowda @Vaishak_J_Films @The_BigLittle
— DrShivaRajkumar (@NimmaShivanna) July 8, 2024
Poster design : #FilmyJam
Picture credit : @sharathpadaru pic.twitter.com/zYFPXly8vR
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT