Published : 03 Jul 2024 03:15 PM
Last Updated : 03 Jul 2024 03:15 PM
சென்னை: இந்த ஆண்டின் முதல் 6 மாதத்தில் அதிக ரேட்டிங் கொண்ட 25 படங்களின் பட்டியலை லெட்டர் பாக்ஸ் சினிமா தளம் வெளியிட்டுள்ளது. அதில் ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’, ‘ஆட்டம்’ உள்ளிட்ட மலையாள படங்கள் ஆதிக்கம் செலுத்தியுள்ளன.
உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களால் அதிகம் பயன்படுத்தப்படும் சினிமா தளம் ‘லெட்டர் பாக்ஸ்’. இந்த தளத்தில் ரசிகர்கள் தாங்கள் பார்த்த படங்களையும், அந்த படம் குறித்த விமர்சனங்களையும், கருத்துகளையும் பதிவு செய்வர். மேலும் திரைப்படங்கள் குறித்த விவாதங்களும் இதில் நிகழும்.
முறையே படங்களுக்கான ரேட்டிங்குகளும் வழங்கப்படும். இந்நிலையில் இந்த தளத்தில் இந்த ஆண்டின் ஜூன் 30-ம் தேதி வரை வெளியான திரைப்படங்களில் டாப் 25 இடங்களைப் பெற்ற படங்களின் பெயர்களை லெட்டர் பாக்ஸ் தளம் வெளியிட்டுள்ளது.
அதில் ‘ட்யூன் பார்ட் 2’ முதல் இடம் பிடித்துள்ளது. 5ஆவது இடத்தில் கிரண் ராவின் ‘லாபட்டா லேடீஸ்’பாலிவுட் படமும், 7வது இடத்தில் மலையாளத்தில் வெளியான சவுபின் ஷாயிரின் ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ படமும் இடம்பிடித்துள்ளது. 10-வது இடத்தில் மலையாளத்தின் ‘ஆட்டம்’ படமும், 15, 16 இடங்கள் முறையே, மம்மூட்டியின் ‘பிரமயுகம்’ மற்றும் ஃபஹத் பாசிலின் ‘ஆவேஷம்’ ஆகிய படங்கள் உள்ளன.
20-வது இடத்தில் ‘அமர்சிங் சம்கிலா’ மற்றும் 25-வது இடத்தில் ‘பிரேமலு’ உள்ளது. இந்தப் பட்டியலைப் பொறுத்தவரை மலையாள படங்களின் ஆதிக்கத்தை காணமுடிகிறது. பெரும்பாலும் ஹாலிவுட் படங்கள் பட்டியலிடப்பட்டுள்ள நிலையில் 2 இந்திப் படங்கள் இடம்பெற்றுள்ளன. தமிழ் படம் எதுவுமில்லை.
“2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரேட்டிங் கொண்ட படங்களை தரவரிசைப்படுத்தி இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. உலகெங்கிலும் திரையங்குகள் அல்லது ஓடிடி தளங்களில் வெளியான படங்களை கொண்டு இந்த தேர்வு நடைபெற்றுள்ளது” என லெட்டர் பாக்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The Top 10 Highest Rated on Letterboxd of 2024 So Far
View the full list here: https://t.co/FTV0alZIyt pic.twitter.com/4g0RCOpMJh
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT