Published : 24 Apr 2024 06:36 AM
Last Updated : 24 Apr 2024 06:36 AM

கன்னடத்தில் அறிமுகமாகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்

பெங்களூரு: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். அவர் இப்போது கன்னட சினிமாவில் அறிமுகமாகிறார். கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் ஹீரோவாக நடிக்கும் படம், உத்தரகாண்டா. இதில் மற்றொரு நாயகனாக தனஞ்செயா நடிக்கிறார்.

கே.ஆர்.ஜி. ஸ்டூடியோஸ் சார்பில் கார்த்திக் கவுடா மற்றும்யோகி ஜி.ராஜ் தயாரிக்கிறார்கள். இதில் 2 நாயகிகள் நடிக்கின்றனர். அதில் ஒருவராக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்.

"இந்தக் கதையில் நாயகிகளுக்கும் முக்கியத்துவம் உள்ளது. அதனால் நன்றாக நடிக்கத் தெரிந்த நடிகைகளைத் தேர்வு செய்தோம். சிவராஜ்குமார் ஜோடியாக பாவனாவும் தனஞ்செயா ஜோடியாக ஐஸ்வர்யாவும் நடிக்கின்றனர்" என்று படக்குழு தெரிவித்துள்ளது.

படத்தை ரோஹித் பதகி இயக்குகிறார். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு பிஜாப்பூர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நடைபெற்று வருகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x