Published : 01 Aug 2023 04:46 PM
Last Updated : 01 Aug 2023 04:46 PM

200-வது நாளை எட்டி ‘மாஸ்’ காட்டும் பாலகிருஷ்ணா, சிரஞ்சீவியின் படங்கள்

பாலகிருஷ்ணாவின் ‘வீர சிம்ஹா ரெட்டி’ மற்றும் சிரஞ்சீவியின் ‘வால்டர் வீரய்யா’ ஆகிய இரண்டு படங்களும் 200-வது நாளாக திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்துள்ளன.

பாபி கொல்லி இயக்கத்தில் சிரஞ்சீவி - ரவிதேஜா நடித்துள்ள படம் ‘வால்டர் வீரய்யா’. கடந்த ஜனவரி 13-ம் தேதி சங்ராந்தியையொட்டி திரையரங்குகளில் வெளியான இப்படம் ரூ.140 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டது. தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இப்படம் உலக அளவில் ரூ.250 கோடியைத் தாண்டி வசூலித்தது. ஸ்ருதிஹாசன், கேத்ரின் தெரசா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. ஆந்திராவில் உள்ள திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் 200-வது நாளை கடந்துள்ளது.

அதேபோல கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடிப்பில் கடந்த ஜனவரி 12-ம் தேதி சங்ராந்தியையொட்டி வெளியான திரைப்படம் ‘வீர சிம்ஹா ரெட்டி’. ஸ்ருதிஹாசன், வரலட்சுமி சரத்குமார், ஹனி ரோஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படத்திற்கு தமன் இசையமைத்திருந்தார். ரூ.110 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் உலக அளவில் ரூ.200 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படமும் 200 நாட்களை எட்டி சாதனை படைத்துள்ளது. ஓடிடியில் படம் வெளியானபோதிலும் ஆந்திராவில் உள்ள குர்னூல் (Kurnool) மாவட்டத்தில் உள்ள திரையரங்குகளில் படம் ஓடிக்கொண்டிருக்கிறது. ரசிகர்களின் ஆதரவினால் படம் 200 நாட்களை எட்டியிருக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x