Published : 09 Jul 2023 06:30 AM
Last Updated : 09 Jul 2023 06:30 AM
ஹைதராபாத்: இந்தி நடிகையான மிருணாள் தாக்குர், ‘சீதாராமம்’ படம் மூலம் தென்னிந்திய சினிமாவுக்கு வந்தார். துல்கர் சல்மான், ராஷ்மிகா நடித்த இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தியில் வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து மிருணாள் தாக்குருக்கு மூன்று மொழிகளிலும் வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் அவர் நடிப்பில் ‘லஸ்ட் ஸ்டோரிஸ் 2’ என்ற வெப் சீரிஸ் வெளியானது.
இந்நிலையில் அவர் தெலுங்கில் 2 புதிய படங்களில் ஒப்பந்தமாகி இருக்கிறார். நானி ஜோடியாக ஒரு படத்திலும் விஜய் தேவரகொண்டா ஜோடியாக இன்னொரு படத்திலும் நடிக்க இருக்கிறார். நானி படத்துக்கு ரூ.3 கோடி சம்பளம் வாங்கிய அவர், விஜய் தேவரகொண்டா படத்துக்கு ரூ.3.5 கோடி சம்பளம் பேசியிருப்பதாகக் கூறப்படுகிறது.
ஒரே நேரத்தில் ஒப்பந்தமான 2 படங்களுக்கும் அவர் வெவ்வேறு ஊதியம் வாங்கியிருப்பது, சினிமா உலகில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. இதற்கிடையே ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் இவர்தான் கதாநாயகி என்று கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT