Published : 27 May 2025 08:28 AM
Last Updated : 27 May 2025 08:28 AM
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்குப் பார்வையாளர்களிடையே வரவேற்பு உள்ளது. இந்நிகழ்ச்சி ஜூனியர், சீனியர் என இரண்டு பகுதிகளாக ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. தற்போது, ஜூனியர் சீசன் 10-ன் ‘கிராண்ட் பினாலே’ நிகழ்ச்சி, நேரு விளையாட்டு அரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை பிரமாண்டமாக நடைபெற்றது.
இதில், டைட்டில் வின்னராக காயத்ரி அறிவிக்கப்பட்டார். அவருக்கு ரூ.60 லட்சம் மதிப்புள்ள வீடு பரிசாக வழங்கப்பட்டது. 2-வது பரிசை நஸ்ரின் வென்றார். அவருக்கு ரூ.10 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது. 3-வது இடத்தை சாரா சுருதி, ஆத்யா என இருவர் பிடித்தனர். அவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்பட்டது.
இவர்களுக்கு நடிகர் கமல்ஹாசனும் ஏ.ஆர்.ரஹ்மானும் இணைந்து பரிசுகளை வழங்கினர். ‘தக் லைஃப்’ படம் அடுத்த மாதம் 5-ம் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் புரமோஷனுக்காக இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இருவரும் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT