Last Updated : 03 Mar, 2025 07:42 PM

 

Published : 03 Mar 2025 07:42 PM
Last Updated : 03 Mar 2025 07:42 PM

Click Bits: ஹார்ட்டீன் அள்ளும் ஸ்டைலழகி தமன்னா க்ளிக்ஸ்!

ஸ்டைலான லுக்கும், வசீகர காஸ்ட்யூமுமாக நடிகை தமன்னா சமீபத்தில் பகிர்ந்த புகைப்படங்கள் பலவும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

2006-ல் ‘கேடி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக நுழைந்தவர் நடிகை தமன்னா.

‘கல்லூரி’, ‘படிக்காதவன்’, ‘அயன்’, ‘சூறா’ என வரிசையாக பல படங்களின் மூலம் கவனத்தை ஈர்த்தவர்.

‘பாகுபலி’ ஆக்‌ஷன் அழகுடன் கவர்ந்தவர் தமன்னா.

கடைசியாக தமன்னாவை தமிழில் ‘அரண்மனை 4’ படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் கண்டனர் தமிழ் ரசிகர்கள்.

‘ஜெயிலர்’ படத்தில் ‘காவலய்யா’ பாடலில் நடனத்தில் மிரட்டி வைரல் வேட்டையாடினார் தமன்னா.

தமன்னா நடிப்பில் இந்தியில் வெளியான ‘ஸ்ட்ரீ 2’ திரைப்படம் வசூலில் மகத்தான சாதனை படைத்தது.

அதன்பின் நீரஜ் பாண்டே இயக்கத்தில் தமன்னா நடித்திருந்த ‘சிகந்த கா முகாதர்’ நெட்ஃப்ளிக் ஓடிடி தளத்தில் கவனம் ஈர்த்தது.

இந்த ஆண்டு தமன்னா நடிப்பில் ‘ஒடேலா 2’ திரைப்படம் வெளியாகிறது. இதில் சிவன் பக்தராக நடித்துள்ளார்.

தமிழில் தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட அவரது அடுத்த தமிழ்ப் படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எதிர்பார்ப்பு மிகுந்துள்ளது.

அவ்வப்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் தரிசனம் தரும் தமன்னாவின் சமீபத்திய ஸ்டைலிஷ் லுக் புகைப்படங்கள் ஹார்ட்டீன்களை அள்ளி வருகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x