Published : 15 Jan 2025 11:54 AM
Last Updated : 15 Jan 2025 11:54 AM

‘கண் பூரா... நீயே தான் தாரா’ - நயன்தாரா பொங்கல் க்ளிக்ஸ்

நடிகை நயன்தாரா பொங்கல் கொண்டாட்டத்தின் போது எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இது பரவலாக கவனம் பெற்று வருகிறது.

இதில் அவரது கணவரும் இயக்குநருமான விக்னேஷ் சிவன் மற்றும் இரண்டு மகன்களும் உள்ளனர்.

கடந்த 2003-ல் சத்தியன் அந்திக்காடு இயக்கத்தில் ஜெயராம் நடிப்பில் வெளியான ‘மனசினக்கரே’ படம் தான் நயன்தாராவின திரையுலக அறிமுகம். டயானாவாக இருந்தவரை நயன்தாரா என பெயர் மாற்றம் செய்தவர் சத்தியன் அந்திக்காடு.

மலையாள திரையுலகில் ஜெயராம், மோகன்லால் ஆகியோருடன் நடித்த அவர் தமிழில் சரத்குமாருடன் ‘ஐயா’, ரஜினியுடன் ‘சந்திரமுகி’ உள்ளிட்ட படங்களில் அடுத்த சில ஆண்டுகளில் நடித்திருந்தார்.

20+ ஆண்டு காலமாக சினிமாவில் தனித்தொரு பெண்ணாக கோலோச்சும் நடிகையாக வலம் வருகிறார்.

நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் கடந்த 2022-ல் திருமண வாழக்கையில் இணைந்தனர். அவர்கள் இருவரும் நீண்ட நாட்கள் காதலித்து வந்தனர். அவர்களது காதல் வாழ்க்கை அனைவரும் அறிந்ததே.

‘நானும் ரவுடி தான்’ படத்தின் படப்பிடிப்பின் போது அவர்கள் இருவரும் காதலில் இணைந்தனர்.

உயிர் ருத்ரோநீல் N சிவன், உலக் தெய்விக் N சிவன் என்பது தான் நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி குழந்தைகளின் பெயர்கள். இதில் ‘N’ என்பது நயன்தாராவையும், ‘சிவன்’ விக்னேஷ் சிவனையும் குறிக்கிறது. தற்போது டாக்சிக், ராக்காயி, மண்ணாங்கட்டி, டியர் ஸ்டூடன்ட்ஸ் உள்ளிட்ட படங்களில் அவர் நடித்து வருகிறார்.

“உங்கள் வீட்டில் புன்னகை பொங்க..இனம் புரியா இன்பம் மனதில் பொங்க...நண்பர்கள் சூழ மகிழ்ச்சி பொங்க.. பொங்கட்டும் தைப் பொங்கல் நம்மை வாழ வைக்கும் தமிழுக்கும் விவசாயிகளுக்கு இந்நாளில் மனமார்ந்த நன்றியை தெரிவிப்போம். இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்” என நயன்தாரா தன் சமூக வலைதள பதிவில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x