Published : 09 Feb 2022 11:08 AM
Last Updated : 09 Feb 2022 11:08 AM

அழகான ஆங்கிலப் படம் - ‘டோன்ட் லுக் அப்’ படத்துக்கு வைரமுத்து பாராட்டு 

‘டோன்ட் லுக் அப்’ ஹாலிவுட் படத்துக்கு கவிஞர் வைரமுத்து பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஆடம் மெக்கே இயக்கத்தில் லியர்னாடோ டிகாப்ரியோ, ஜெனிபர் லாரன்ஸ் நடித்துள்ள படம் ‘டோன்ட் லுக் அப்’. இப்படம் சமீபத்தில் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் நேரடியாக வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கும் ஒரு விண்கல்லை பற்றி தெரிந்துகொள்ளும் இரண்டு விஞ்ஞானிகளை சுற்றி நடக்கும் கதையில் காலநிலை மாற்றம், சமகால அமெரிக்க அரசியல் ஆகியவற்றை நக்கலுடன் ரசிக்கத் தக்க வகையில் படமாக்கியுள்ளனர். இப்படம் வெளியாகி இரண்டு வாரங்களில் 263 மில்லியன் மணி நேரங்கள் பார்க்கப்பட்டு சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இப்படத்துக்கு கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார். இப்படம் குறித்து அவர் கூறியுள்ளதாவது:

“விண்கோள் ஒன்று
மோதப்போவதால்
பூமி
சிதறப்போகிறதென்று
பதறிச் சொல்கிறார்கள்
நாசா விஞ்ஞானிகள்

அமெரிக்க ஜனாதிபதி
சிகரெட் பிடித்துக்கொண்டே
சிரிக்கிறார்

உலகம்
நகையாடுகிறது

கடைசியில்
அது நிகழ்ந்தே விடுகிறது

அழகான ஆங்கிலப் படம்
Don't Look Up
(மேலே பார்க்காதே)

நீங்கள் மேலே பாருங்கள்.”

இவ்வாறு வைரமுத்து கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x