Published : 26 Feb 2020 10:49 AM
Last Updated : 26 Feb 2020 10:49 AM
கரோனா வைரஸ் பாதிப்பு வெனிஸ் நகரத்தின் நடைபெற்று வந்த ‘மிஷன் இம்பாசிபிள்’ படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.
டாம் க்ரூஸ் நடித்த மிஷன் இம்பாஸிபிள் படங்கள் உலகம் முழுவதும் பிரபலமானவை. ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு இணையான ஸ்டண்ட் காட்சிகளும், புத்திசாலித்தனமான திரைக்கதையும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவை.
1996 தொடங்கி கடந்த 2018ஆம் ஆண்டு வரை 6 ‘மிஷன் இம்பாசிபிள்’ திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தின் ஏழாம் பாகத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. பாரமவுண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை க்ரிஸ்டோபர் மெக்குயரி இயக்கி வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பின் ஒரு பகுதி இத்தாலியின் வெனிஸ் நகரத்தின் நடைபெற்று வந்தது. இந்நிலையில் உலகை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தாக்குதலுக்கு இத்தாலியும் தப்பவில்லை. இதுவரை இத்தாலியில் 300க்கு அதிகமானோர் கரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால் படக்குழுவினரின் நலன்கருதி ‘மிஷன் இம்பாசிபிள்: 7’ படத்தின் படப்பிடிப்பை ரத்து செய்வதாக பாரமவுண்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
பாரமவுண்ட் நிறுவனம் கடந்த திங்கட்கிழமை சீனாவில் வெளியாகவிருந்த ‘சோனிக் தி ஹெட்ஜ்ஹாக்’ படத்தின் வெளியீட்டையும் கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஒத்திவைத்திருந்தது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு கரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக ‘ஜேம்ஸ் பாண்ட்’ படக்குழு தனது சீனா பயணத்தை ரத்து செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT