Published : 27 Jan 2020 10:22 AM
Last Updated : 27 Jan 2020 10:22 AM
சோனி தயாரிப்பு நிறுவனம் 'அனகோண்டா' படத்தை மீண்டும் துவங்க முடிவு செய்துள்ளது.
1997-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'அனகோண்டா'. அமேசான் காடுகளில் இருக்கும் பழங்குடியைப் பற்றிய ஆவணப் படம் எடுக்கச் செல்லும் ஒரு குழு அனகோண்டாவிடம் மாட்டிக்கொள்கிறது. வில்லனின் சதியை மீறி இந்தக் குழு எப்படி தப்பித்தது என்பதே கதை. வெளியான நேரத்தில் மோசமான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும் வணிக ரீதியில் சர்வதேச அளவில் பெரிய வசூலைப் பெற்ற படம் இது. ஜெனிஃபர் லோபஸ், ஜான் வாய்ட், ஓவன் வில்ஸன் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர்.
தொடர்ந்து 2004-ல் இரண்டாம் பாகம் 'தி ஹண்ட் ஆஃப் தி ப்ளட் ஆர்கிட்' வெளியாகி அதுவும் முதல் பாகத்தைப் போலவே மோசமான விமர்சனங்களையும், நல்ல வசூலையும் பெற்றது. இதன் பிறகு 2008, 2009, 2015 என நேரடியாக தொலைக்காட்சிக்காக மூன்று 'அனகோண்டா' திரைப்படங்கள் எடுக்கப்பட்டு வெளியாகின. ஆனால் இதில் எந்தப் படமும் மக்களிடம் வரவேற்பைப் பெறவில்லை.
பட வரிசைகள், பழைய படங்களின் ரீமேக் அல்லது முடிந்து போன பட வரிசையின் ரீபூட் என்ற ஹாலிவுட்டின் வழக்கத்துக்கு ஏற்ப தற்போது சோனி நிறுவனம் 'அனகோண்டா' படத்தை மீண்டும் தொடங்க முடிவெடுத்துள்ளது. 'ஸ்னோ வைட் அண்ட் தி ஹண்ட்ஸ்மேன்', 'டைவெர்ஜண்ட்' உள்ளிட்ட படங்களின் கதாசிரியர் ஈவான் டாஹெர்டியை திரைக்கதை எழுத ஒப்பந்தம் செய்துள்ளனர். மற்றபடி இயக்குநர், நடிகர் என யாரும் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT