Published : 05 Oct 2019 07:51 PM
Last Updated : 05 Oct 2019 07:51 PM
ஜேம்ஸ் பாண்ட் நடிப்பில் உருவாகும் 'நோ டைம் டு டை' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.
1953ஆம் ஆண்டு இயன் ஃப்ளெமிங் உருவாக்கிய ஜேம்ஸ் பான்ட் கதாபாத்திரம் உலகம் முழுவதும் மிகவும் பிரபலம். 1962ஆம் ஆண்டு முதல் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு இதுவரை 24 படங்கள் வெளியாகியுள்ளன. வியக்கவைக்கும் ஆக்ஷன் காட்சிகள், புதிய தொழில்நுட்பங்கள், விறுவிறுப்பான திரைக்கதைகளைக் கொண்ட இப்படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உண்டு.
கடைசியாக வெளியான நான்கு பாண்ட் படங்களில் ஜேம்ஸ் பாண்டாக டேனியல் க்ரெய்க் நடித்து வருகிறார். அடுத்ததாக வெளியாகவுள்ள 'நோ டைம் டு டை' ஜேம்ஸ் பாண்டாக க்ரெய் நடிக்கும் கடைசி படமாகும்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு பல்வேறு நாடுகளில் நடைபெற்று வந்தது. அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. தற்போது, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
5 ஆண்டுகள் கழித்து ஜேம்ஸ் பாண்ட் படம் வெளியாவதால், ரசிகர்கள் பெரும் ஆர்வமுடன் இந்தப் படத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
Celebrate #JamesBondDay with the first poster for #NoTimeToDie #Bond25 pic.twitter.com/EoU4PXhxwX
— James Bond (@007) October 5, 2019
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT