Published : 27 Feb 2017 08:54 AM
Last Updated : 27 Feb 2017 08:54 AM
ஹாலிவுட் திரையுலகின் மிக உயரிய கவுரவமாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. 24 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகள் வழங்கப்படுகின்றன. 89-வது ஆஸ்கர் திருவிழாவில் 2017-ன் வெற்றிப் படைப்புகள், வெற்றியாளர்களின் பட்டியல் இதோ...
14 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்ட 'லா லா லேண்ட்' திரைப்படம் சிறந்த இயக்குநர், சிறந்த நடிகை உள்ளிட்ட 5 ஆஸ்கர் விருதுகளை அள்ளியது.
* சிறந்த படம்: மூன் லைட்
கடைசி நேரக் குளறுபடி சிறந்த படத்துக்கான ஆஸ்கர் விருதை அறிவிக்க நடிகர், இயக்குநர் வாரன் பீடி மேடைக்கு வந்தார். முதலில் அவரிடம் தந்த உறையில் எம்மா ஸ்டோன் - லா லா லேண்ட் என்ற பெயர் இருந்ததால், சிறந்த படம் லா லா லேண்ட் என அவர் அறிவித்தார். படக்குழுவைச் சேர்ந்தவர்களும் மேடைக்கு வந்து விருதுகளைப் பெற்றனர். பிறகு நடுவர் குழுவைச் சேர்ந்த இருவர் மேடைக்கு வந்து நடந்த குளறுபடியை கூறினார்கள். சிறந்த படத்துக்கான உரிய உறையை வாங்கி, மூன்லைட் விருது பெற்றதாக பின்னர் அறிவிக்கப்பட்டது. ஆஸ்கர் விழாவில் இப்படியான குளறுபடி நடப்பது இதுவே முதல் முறையாகும். |
* சிறந்த நடிகை: எம்மா ஸ்டோன் - லா லா லேண்ட்
* சிறந்த நடிகர்: கேஸி ஆஃப்லெக் - மான்செஸ்டர் பை தி சீ
"இந்த சமூகத்தில் ஓர் அங்கம் வகிப்பதைப் பெருமிதமாக கருதுகிறேன்." - நடிகர் கேஸி ஆஃப்லெக்
* சிறந்த இயக்குநர்: டாமின் சாஸெல்லே - லா லா லேண்ட்
"இது காதல் சொல்லும் படம். இதை உருவாக்கும்போதே நான் காதலில் விழுந்தது அதிர்ஷ்டம்." - லா லா லேண்ட் இயக்குநர் டாமின் சாஸெல்லே
* சிறந்த தழுவல் திரைக்கதை - மூன்லைட் | திரைக்கதை: பாரி ஜென்கிங்ஸ், கதை - டாரெல் ஆல்வின் மெக்கிரானி
* சிறந்த திரைக்கதை: மான்செஸ்டர் பை தி ஸீ - கென்னத் லோனர்கன்
* சிறந்த பாடல்: சிட்டி ஆஃப் ஸ்டார்ஸ் - லா லா லேண்ட்
"மழையில் பாடும் குழந்தைகளுக்கும், அவர்களை மழையில் மகிழவிடும் அனைத்து அம்மாக்களுக்கும் இந்த விருதை சமர்ப்பிக்கிறேன்." - லா லா லாண்ட் பட பாடலுக்காக விருது பெற்ற பெஞ்ச் பாசெக்.
* சிறந்த பின்னணி இசை: லா லா லாண்ட் - ஜஸ்டின் ஹர்விட்ஸ்
* சிறந்த ஒளிப்பதிவு - லா லா லேண்ட்
* சிறந்த எடிட்டிங்- ஜான் கில்பர்ட் ( படம்: ஹாக்ஷா ரிட்ஜ்)

ஹாக்ஷா ரிட்ஸ் திரைப்படம் |
* சிறந்த குறும்படம் (லைவ் ஆக்ஷன் பிரிவு)- சிங்
* சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்- தி ஜங்கிள் புக்
* சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு- டேவிட் வாஸ்கோ (படம்: லா லா லேண்ட்)

லா லா லேண்ட் திரைப்படம் |
* சிறந்த குறும்படம் (அனிமேஷன் பிரிவு)- பைபர்
* சிறந்த ஒலிக்கலவை- கெவின் ஓ கானெல், ஆண்டி ரைட் (படம்: ஹாக்ஷா ரிட்ஜ்)
* சிறந்த ஒலித்தொகுப்பு- சில்வியன் பெல்மேர் (படம்: அரைவல்)
* சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம்- அலெஸாண்ட்ரோ பெட்ரோலாஸி மற்றும் கியோர்கியோ (படம்: சூசைட் ஸ்குவாட்)
* சிறந்த அயல்நாட்டு மொழி திரைப்படம்- தி சேல்ஸ்மேன் (ஈரான்)

தி சேல்ஸ்மேன் திரைப்படம் |
* சிறந்த ஆவணப்படம்- ஓ.ஜெ.மேட் இன் அமெரிக்கா
* சிறந்த அனிமேஷன் திரைப்படம்- ஜூடோபியா

ஜூடோபியா படத்தின் ஒரு காட்சி |
* சிறந்த ஆடை வடிவமைப்பு- காலின் அட்வுட் (படம்: பெண்டாஸ்டிக் பீஸ்ட்ஸ் அண்ட் வேர் டூ பைண்ட் தெம்)
* சிறந்த உறுதுணை நடிகை- வயோலா டேவிஸ் (படம்: பென்சஸ்)
* சிறந்த உறுதுணை நடிகர்- மஹெர்சலா அலி (படம்: மூன்லைட்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT