Published : 13 Nov 2025 11:19 AM
Last Updated : 13 Nov 2025 11:19 AM

ஹாலிவுட் நடிகை சாலி கிர்க்லேண்ட் காலமானார்

பழம்பெரும் ஹாலிவுட் நடிகை சாலி கிர்க்​லேண்ட் (84) உடல் நலக்​குறை​வால் கால​மா​னார்.

ஹாலிவுட்​டில் வெளி​யான காமெடி படமான, ‘அனா’, ‘கோல்டு பீட்’, ஹாரர் படமான ‘த ஹாண்​டட்’, ஃபேன்​டஸி படமான `புரூஸ் அல்​மைட்டி' உள்பட பல படங்​களில் நடித்​திருப்​பவர் சாலி கிர்க்​லேண்ட். `அனா' படத்​தில் இவர் நடிப்பு மிகுந்த பாராட்​டைப் பெற்​றது. சிறந்த நடிகைக்​கான ஆஸ்​கர் விருதுக்கு அப்படம் பரிந்​துரைக்​கப் ​பட்​டது. ஆனால் அவருக்கு கோல்​டன் குளோப் விருது கிடைத்​தது. சின்​னத்​திரை தொடர்​களி​லும் நடித்து வந்​தார்.

60 ஆண்​டுக்​கும் மேலாக நடித்து வந்த அவர், சுமார் 250 படங்​களுக்கு மேல் நடித்​துள்​ளார். கடந்த ஒரு வருட​மாக நினை​வாற்​றல் இழப்பு நோயால் பாதிக்​கப்​பட்​டிருந்​தார். அதற்​காகச் சிகிச்​சைப் பெற்று வந்​தார். கடந்த அக்​டோபர் மாதம் கீழே விழுந்​த​தில் அவருடைய விலா எலும்​பு​கள் மற்​றும் கால்​களில் காயம் ஏற்​பட்​டது. அதற்​காகச் சிகிச்​சைப் பெற்று வந்த அவர் நேற்று முன் தினம் உயி​ரிழந்​தார். அவரது மறைவுக்கு ஹாலிவுட் திரையுலகினர் இரங்​கல்​ தெரி​வித்​துள்​ளனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x