Published : 27 Oct 2025 11:04 AM
Last Updated : 27 Oct 2025 11:04 AM
அமெரிக்காவில் கொரில்லா போராளிகளிடம் உள்ள பணயக் கைதிகளை மீட்க செல்லும் அதிரடிப் படை வீரர்கள், வேற்றுக்கிரகவாசிகளால் துன்பத்துக்கு ஆளாகின்றனர். அதை அழிக்க கதாநாயகன் என்ன மாதிரியான சாகங்களை மேற்கொள்கிறார் என்கிற கதையை மையமாக வைத்து, ‘பிரிடேட்டர்’ என்ற ஹாலிவுட் திரைப்படம் 1987,-ம் ஆண்டு வெளியானது.
இதில் அர்னால்டு ஸ்வாஸ்நேகர், கார்ல் வெயிட் உள்பட பலர் நடித்திருந்தனர். ஜான் மெக்டீர்னர் இயக்கிய இந்தப் படம் உலகம் முழுவதும் வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து இதன் அடுத்த பாகம் 1990-ம் ஆண்டு வெளியானது. இதை ஸ்டீவன் ஹாப்கின்ஸ் இயக்கினார். இதன் அடுத்தடுத்த பாகங்கள் தொடர்ந்து உருவாகி வரவேற்பைப் பெற்றன.
இந்தப் பட வரிசையில் அடுத்து ‘பிரிடேட்டர்: பேட்லேண்ட்ஸ்’ ( Predator: Badlands ) என்ற படம் உருவாகி இருக்கிறது. முதல் முறையாக பிரிடேட்டர் உயிர்வாழப் போராடுவதாக இதன் கதை அமைக்கப்பட்டுள்ளது. டான் டிராக்டன்பெர்க் இயக்கியுள்ள இப்படத்தில் எல்லே ஃபான்னிங் நாயகனாக நடித்துள்ளார். இந்தப் படம் நவ.7- ம் தேதி ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT