Published : 07 Sep 2025 10:20 AM
Last Updated : 07 Sep 2025 10:20 AM

ஹாலிவுட்டில் வித்யுத் ஜம்வால்: உறுதி செய்தது தயாரிப்பு நிறுவனம்

இந்தி நடிகர் வித்யுத் ஜம்வால், தமிழில், துப்பாக்கி, அஞ்சான், கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ‘மதராஸி’ படங்களில் நடித்துள்ளார். இவர் ‘ஸ்ட்ரீட் பைட்டர்’ என்ற ஹாலிவுட் ஆக்‌ஷன் படத்தில் தால்சிம் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாகச் செய்திகள் வெளியாகி இருந்தன.

அவருடன் ஆண்ட்ரு கோஜி, நோவா சென்டினியோ, ஜேசன் மோமோவா ஆகியோர் நடிக்கின்றனர் என்றும் இந்த படம் கேப்காமின் பிரபலமான வீடியோ கேம் தொடரை அடிப்படையாகக் கொண்டது என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில் அவர் நடிப்பதை ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனமான பாரமவுண்ட் பிக்சர்ஸ் உறுதிப்படுத்தியுள்ளது. “ரகசியங்கள், நீண்ட காலம் தாக்குப்பிடிக்காது. ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ இப்போது தயாரிப்பில் இருக்கிறது. 2026-ம் ஆண்டு அக்.16-ல் வெளியாகும்” என்று தெரிவித்துள்ள இந்நிறுவனம் அதில் நடிப்பவர்களின் பெயர்களையும் வெளியிட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x